ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பலரும் விவாதித்து விட்டார்கள். அரசியலுக்கு அவசியமான தலைமைப்பண்பு அவரிடம் உள்ளதா என்பதை நாம் முதலில் பார்க்கலாம். பொது பிரச்சினைகளை விட்டு விடுவோம். அவர் சார்ந்த திரைஉலகில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட பிரச்சினைகளை அவர் அணுகிய விதத்தை மட்டும் பார்க்கலாம்.
96-97 ல் திரை உலகத்தை உலுக்கிய பிரச்சினை பெப்சிக்கும் இயக்குநர்களுக்குமான பிரச்சினை. ராமன் அப்துல்லா படத்தில் ஸ்டண்ட் யூனியன் ஆட்கள், பாலு மகேந்திராவுடன் ஏற்பட்ட பிரச்சினையால் பேக்கப் சொன்னதால் ஆரம்பித்த இந்த பிரச்சினை கிட்டத்தட்ட ஒரு வருடம் திரைஉலகை காயப்போட்டது. இதை முடிவுக்கு கொண்டு வர பலரும் பாடுபட்டனர். ஆனால் இதை ரஜினி வேடிக்கை மட்டுமே பார்த்தார். அவரின் கருத்தாக ஒரு அ னா கூட இப்பிரச்சினையில் பதிவாகவில்லை.
90 களின் மத்தியில் ஆரம்பித்து, ஜெயலலிதா 2004 ல் தடுப்பு சட்டம் கொண்டு வரும் வரை குத்தாட்டம் போட்டது திருட்டு விசிடி பிரச்சினை. பல தியேட்டர்களை ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஆகவும், கல்யாண மண்டபமாகவும் மாற்றிய பெருமைக்குரியது இது. இந்த காலகட்டத்தில் இரண்டு பேர் சில படங்களை எடுத்தார்கள். அதை உப்புமா படம் என்றால், அதற்கு முன்னால் உப்புமா படம் எடுத்தவர்கள் சண்டைக்கு வருவார்கள். அத்தகைய படங்களை எடுத்தவர்கள் கே.ராஜன் மற்றும் பாபு கணேஷ். அவர்கள் கூட திருட்டு விசிடிக்கு எதிராக குரல் கொடுத்தார்கள். அவர்கள் படங்களை விசிடியுடன் 100 ரூபாய் கொடுத்தாலும் யாரும் பார்க்கமாட்டார்கள். பர்மா பஜாரில் பல தடவை இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
இந்த காலகட்டத்தில் தான் (1996- 2004) முத்து, அருணாசலம்,படையப்பா மற்றும் பாபா ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்த ஆண்டுகளில் திருட்டு விசிடி யை எதிர்த்து எந்த வாய்ஸ்ம் ரஜினியால் கொடுக்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம்? நாம இரண்டு வருஷத்துக்கு ஒரு படம் தர்றோம். எப்படியும் ஓடிடும். எதுக்கு அனாவசியமா வாய்ஸ் என்ற எண்ணமா?
தன்னை உயர்த்திய துறைக்கு வந்த பிரச்சினைகளை தீர்க்க துரும்பைக் கூட தூக்கிப்போடாத ரஜினிக்கு தலைமைப் பண்பு எந்த அளவுக்கு இருக்கிறது?.
27 comments:
அது ஏங்க கண்ணன் இப்படி ஒரு ஆதங்கம்?? ரஜினி இதுவரை அரசியலில் நுழைவது குறித்து எதுவும் பேசவில்லை. அதற்கு முன்பாகவே ரசிகர்களைப் போல (என்னைப்) நீங்களும் உணர்ச்சிவசப்படுகிறீர்கள்! அவர் வரும் போது பார்க்கலாம்!
உங்களது பக்கத்தின் பெயர் “வாழு வாழ விடு” நன்றாக உள்ளது :)
\\இதுவரை அரசியலில் நுழைவது குறித்து எதுவும் பேசவில்லை\\
அன்பு விஜய்
இதுதான் என் ஆதங்கமும். ஊடகங்கள் கண் காது மூக்கு வைத்து செய்திகளை வெளியிடும் போது, தன் ரசிகர்களுக்காவது உண்மையைச் சொல்ல வேண்டுமல்லவா?
அவர் பேப்பர்,பத்திரிக்கைகளை படிக்கிறாரா என்றே தெரியவில்லை.
விஐய்,
\\உங்களது பக்கத்தின் பெயர் “வாழு வாழ விடு” நன்றாக உள்ளது :)\
ஒருமுறை நான் சிக்னலில் நிற்கும் போது பார்த்த ஒரு காரில் இது எழுதியிருந்தது. கவர்ந்தது. காப்பி அடித்துவிட்டேன்
நன்றி.
//"ரஜினிக்கு தலைமைப்பண்பு இருக்கிறதா?"
//
என்னங்க இது? தலைப்பு இப்படி தப்புத்தப்பா வெச்சிருக்கீங்க. இதை ரொம்ப வருஷத்துக்கு முன்ன வெச்சிருக்கணும். இப்போதைக்கு இதயெல்லாம் எங்க தலயப் பார்த்து கேட்டு ஆராய்ச்சிப் பண்ணி பதிவு போடணும்:):):)
இராப்,
தலைவி,
அகில உலக அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்
//96-97 ல் திரை உலகத்தை உலுக்கிய பிரச்சினை பெப்சிக்கும் இயக்குநர்களுக்குமான பிரச்சினை. ராமன் அப்துல்லா படத்தில் ஸ்டண்ட் யூனியன் ஆட்கள், பாலு மகேந்திராவுடன் ஏற்பட்ட பிரச்சினையால் பேக்கப் சொன்னதால் ஆரம்பித்த இந்த பிரச்சினை கிட்டத்தட்ட ஒரு வருடம் திரைஉலகை காயப்போட்டது. இதை முடிவுக்கு கொண்டு வர பலரும் பாடுபட்டனர். ஆனால் இதை ரஜினி வேடிக்கை மட்டுமே பார்த்தார். அவரின் கருத்தாக ஒரு அ னா கூட இப்பிரச்சினையில் பதிவாகவில்லை.
//
இந்த விஷயத்தில் அவர் மட்டும் தலையிட்டிருந்தார்னு வெச்சுக்கங்க, விஷயம் வேற மாறி திரும்பி அவர திட்டி எல்லாரும் கும்மி அடிச்சிருப்பாங்க. அதோட லூசுத்தனமா மாநிலப் பிரச்சினையையும் கெளப்பியிருப்பாங்க. ஆனா அவர் சைலண்டா நெறைய வேல செஞ்சாருன்னு தான் நான் கேள்விப்பட்டேன். உள்ளடி வேல பாத்துக்கிட்டிருந்த டயமன்ட்பேர்ல் பொயட்டயெல்லாம் இவர்தான் கண்டுபிடிச்சி சரிக்கட்டினார்னும், இன்னும் நெறைய கலகக்காரர்களை, தன்னோட சரியான அல்லக்கைகளின் மூலம் வெளிச்சம்போட்டு காட்டினார்னும் கேள்விப்பட்டிருக்கேன்.
//இரண்டு பேர் சில படங்களை எடுத்தார்கள். அதை உப்புமா படம் என்றால், அதற்கு முன்னால் உப்புமா படம் எடுத்தவர்கள் சண்டைக்கு வருவார்கள். அத்தகைய படங்களை எடுத்தவர்கள் கே.ராஜன் மற்றும் பாபு கணேஷ். அவர்கள் கூட திருட்டு விசிடிக்கு எதிராக குரல் கொடுத்தார்கள். அவர்கள் படங்களை விசிடியுடன் 100 ரூபாய் கொடுத்தாலும் யாரும் பார்க்கமாட்டார்கள். பர்மா பஜாரில் பல தடவை இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
//
:):):):):):):) super
பாத்து முரளி.. அது தலைவர் காராக இருந்திருக்கப் போவுது!
அவர் வாழுறார்... அடுத்தவங்களையும் வாழ விடுகிறார்.
"ரஜினிக்கு தலைமைப்பண்பு இருக்கிறதா?"
கடந்த 15 ஆண்டுகளாக நான் பார்த்த வரை - இல்லை
ராப், தொடர் ஆதரவுக்கு நன்றி.
இங்கு பிரச்சினைய்ய தீர்க்கும் வித்த்தில் தான் தலைமைப்பண்பு வெளிப்படும். எம் ஜி ஆர், ஜெயல்லிதா,விஜயகாந்த் ஆகியோர் மீதும் வெளிமாநில குற்றச்சாட்டு இருந்த்து. அவர்கள் சமாளிக்கவில்லையா?. என் பூர்வீகம் மகாராஷ்டிரம், பிறந்து வளர்ந்த்து கர்நாடகம், வாழவைத்தது தமிழ்நாடு என பேசி ஜெயிக்கலாமே?. பிண்ணனியில் இருந்து செயல்படுவது தலைமைக்குணம் இல்லையே?
//நாம இரண்டு வருஷத்துக்கு ஒரு படம் தர்றோம். எப்படியும் ஓடிடும். எதுக்கு அனாவசியமா வாய்ஸ் என்ற எண்ணமா?//
சரியாகச் சொன்னீர்கள்
அதுசரி..இப்ப அப்பிடி நினைப்பாரா.. பாபா,குசேலன்??
நர்சிம்
அவர் எதுவும் சொல்லாமையே இன்னும் 30 நாள்ல அரசியல் பற்றி அறிவிக்கப்போறாருன்னு இவர்களே அறிவிச்சுட்டாங்க....
பேசாமலே இப்படி....
ரஜினி பேசினாலும் (பேசாததை எல்லாம் கூறி) குறை சொல்றாங்க பேசலைனாலும் குறை சொல்றாங்க ..
நரசிம் உங்கள் படம் சூப்பர்.
என் மனசில் பட்டதை இங்கே சொல்லிக்கறேன்.
அவர் நடிகர். தொழில் நடிப்பு. அப்படியே விட்டுட்டா நல்லா இருக்குமே.
எதுக்கு நடிகர்கள் அரசியல் செய்யணுமுன்னு எல்லாரும் எதிர்பார்க்கிறாய்ங்க........
நம்ம நாட்டுலே நிழலில் வருவதையெல்லாம் நிஜமுன்னு நம்பும் கூட்டம் எப்படி உருவாச்சு?
வாங்க மேடம்,
\\எதுக்கு நடிகர்கள் அரசியல் செய்யணுமுன்னு எல்லாரும் எதிர்பார்க்கிறாய்ங்க........\\
இங்கு அவர் பூடகமாக நடந்து கொள்வதுதான் பிரச்சினையே.
வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு அறிவிச்சுட்டா யார் எதிர்பார்க்கப்போகிறார்கள்.
வாங்க கிரி,
நேரடியா அறிவிப்பு செய்யலாமே அவர். பல ரசிகர்களை அவர் செய்தி நல்ல முறையில் சென்று அடைவதில்லை. இதுவும் அவருக்கு நெகடிவ்வே.
நன்றாக ஆரம்பித்து சுறுக்கமாக முடித்துவிட்டீர்கள், இன்னும் பலவற்றைக் குறிப்பிட்டு எழுதி இருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.
முதலில் ரஜினி தன் ரசிகர்களைக் கட்டுக்குள் வைத்திருக்கிறாரா என்பதே கேள்விக் குறிதான். பிறகு தானே தலைமைப் பண்பு குறித்துப் பேசமுடியும். படத்துக்கு படம் பஞ்ச் வசனம் பேசிவிட்டு, அதுவும் கதையாசிரியர்கள் எழுதிக் கொடுத்தது என்று அடித்தாரே பல்டி, யாருமே அதையெல்லாம் ரசிக்கவில்லை.
2004ம் ஆண்டு குமுதம் ரிப்போர்ட்டருக்கு அளித்த பேட்டியில் ஒரு முறை கூறியதைத்தான் இப்போது குசேலனிலும் கூறியுள்ளார். இதில் “பல்டி” எங்கிருந்து வந்தது??.
avaru enna sonnarunga
ivangala ezhuduranga
namala onna karpanai pannikitu mathavangala kuttam solla kudathu
ஹா ஹா ஹா முரளி செம்மையான காமெடி தலைப்பு. சூப்பர் தலைவருங்க ரஜினி. தன்னோட ரசிகர்களை இத்தனை வருஷமா ஏமாத்தி தோரணம் கட்டி கொடி பிடிக்க வைச்சிருக்காரே இதுவே போதாதா அவரோட லட்சணத்தை காட்ட.
//ரஜனிக்கு முதுகெழும்பு இருக்கா என தலைப்பை மாற்றுங்கள். விஜயகாந்த சரத்குமார் போன்றவர்களுக்கு இருக்கும் தைரியம் கூட ரஜனிக்கு இல்லை. இருந்திருந்தால் தமிழ்நாட்டைக் காட்டிக்கொடுத்து கன்னடர்களிடம் மன்னிப்புக்கேட்பாரா?//
நானும் வழிமொழிகிறேன்.
சர்ச்சைக்குரிய சில பின்னூட்டங்களை வேதனையோடு அழித்திருக்கிறேன். இந்த விவாதம் தனிநபர் தாக்குதலாக செல்லும் போக்கை அனுமதிப்பதற்கில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
கோவி கண்ணன்,ஸ்ரீ, நிக் வருகைக்கு நன்றி.
வந்தியத்தேவன், தங்களின் கருத்துக்களை வெளியிட இயலாமைக்கு வருந்துகிறேன்
முரளி கண்ணன், கமல் ரசிகரான உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவை பார்த்ததில் எனக்கு சிறிது வருத்தமே. ரஜினியிடம் தலைமை பண்பு இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? அவர் ஒரு சிறந்த நடிகர், entertainer.
அன்பேசிவத்தையும், விருமாண்டியையும் மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க முடியாதே. சிவாஜியும் தேவை அல்லவா?
அவரும் சராசரி மனிதரே. அவருக்கு இருக்கும் பேருக்கும் புகழுக்கும் அவர் சந்திக்கும் இத்தகைய விமர்சனங்கள் அவர் கொடுக்கும் கூலி. நாமும் அதனை அதிகப் படுத்த வேண்டாமே.
கமல் சந்திக்காத விமர்சனங்களா? ஆளவந்தான் தொடங்கி தசாவதாரம் வரை அவர் ஒவ்வொரு படம் எடுத்து வெளியிடுவதற்குள் அவர் படும் பாடு நாம் அறியாததல்லவே. இத்தனைக்கும் அவர் அரசியலில் சேராதவர்.
அனைத்தையும் ஒதுக்கி விட்டு ரோபோவை ரசிப்போம், மர்மயோகியை சிலாகிப்போம் (கமல் ரசிகர்களாக).
எனது தனிப்பட்ட கருத்துக்கள். தங்களை வருத்தி இருந்தால் இதனை வெளியிட வேண்டாம். மன்னியுங்கள்.
சத்யபிரியன்
கருத்துப் பகிர்தலுக்கு நன்றிகள்.
இனி கூடிய மட்டும் இம்மாதிரி பதிவுகள் எழுத வேண்டாம் என உத்தேசித்திருக்கிறேன். அதை என் இன்னொரு பதிவில் பின்னூட்ட பதிலாக கொடுத்திருக்கிறேன்.
If you have any doubt, please check here.
இதுதான் ஒரு நல்ல மக்கள் தலைவனுக்குரிய குணம்!
இதுதான் ஒரு நல்ல மக்கள் தலைவனுக்குரிய குணம்! - 2
வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி இந்தியன்
Sinimakku ellam ethukku thalimai panbu......Arasiyal varattum parkalam...
Post a Comment