ஐம்பது ஆண்டுகள் ஆகப் போகின்றன அந்த நகைச்சுவை காட்சி வெளியாகி, இந்த தலைமுறையினரும் அந்த பதத்தை உபயோகப்படுத்துகிறார்கள். மன்னார் அண்ட் கம்பெனி தான் அது. 1959 ஆம் ஆண்டு கல்யாணப்பரிசு படத்தை இயக்கிய ஸ்ரீதர், தமிழ் சினிமாவுக்கு விடிவெள்ளியாய் வந்தார். செட்டுக்குள் சுற்றிக்கொண்டு இருந்த சினிமாவை வெளியுலகுக்கு அழைத்து வந்தவர் பாரதிராஜா என்பார்கள். நாடகத்தனமாக சென்று கொண்டிருந்த சினிமாவை இயல்பான கலை வடிவமாக்கியவர் ஸ்ரீதர்.
1959 கல்யாணப்பரிசு
1960 விடிவெள்ளி, மீண்ட சொர்க்கம்
1961 தேன் நிலவு
1962 நெஞ்சில் ஓர் ஆலயம், போலீஸ்காரன் மகள், ஆலயமணி
1963 நெஞ்சம் மறப்பதில்லை
1964 காதலிக்க நேரமில்லை
1965 சுமை தாங்கி, வெண்ணிற ஆடை
என குறுகிய காலத்திலேயே பல அருமையான படங்களை தந்தவர். தெலுங்கு, இந்தியிலும் கொடி நாட்டியவர். ஜெயலலிதா வை அறிமுகப்படுத்தியவர், இந்தி திரைஉலகின் கனவுக்கன்னி ஹேமமாலினி யை மேக்கப் டெஸ்டில் நிராகரித்தவர், அருணாசலம் படம் மூலம் ரஜினி உதவ வந்த போது, நான் நன்றாக இருக்கிறேன். வேறு ஒருவருக்கு உதவுங்கள் என்ற தங்க மனதுக்காரர். ஜெமினி கணேசன் முதல் விக்ரம் வரை மூன்று தலைமுறையையும் இயக்கியவர்.
கல்யாணப் பரிசு
ஜெமினி கணேசன், சரோஜா தேவி, தங்கவேலு நடித்த காதல் தோல்விப்படம். இதில் சரோஜா தேவி தன் கொஞ்சும் குரலால் ' அம்மா நான் காலேஜ்க்குப் போகிறேன்' என்று காதலனுக்கு சிக்னல் கொடுக்கும் பாங்கு, அப்போதைய இளம் பெண்களிடம் மிகப் பிரபலம். தங்கவேலுவின் மனைவியை ஏமாற்றும் காமெடி 50 ஆண்டுகளாகியும் புதியதாகவே உள்ளது. மன்னார் அண்ட் கம்பெனி, எழுத்தாளர் பைரவன் என அவர் ஏமாற்றுவதை விவேக் பார்த்திபன் கனவில் மாற்றி பயன்படுத்தி இருப்பார்
தேன் நிலவு
தமிழின் முதல் ரொமாண்டிக் காமெடி படம்?. தந்தையின் தேனிலவுக்கு உடன் செல்லும் இளம்பெண், மானேஜர் இடையே ஏற்படும் காதல். ஜெமினி கணெசன், வைஜயந்தி மாலா, தங்கவேலு நடித்தது. ஓஹொ எந்தன் பேபி, பாட்டு பாடவா போன்ற ஏ எம் ராஜா வின் இசையில் அமைந்த பாடல்கள் இன்றும் நம்மை கேட்கத் தூண்டுபவை. அனேகமாக சாமானிய மக்களுக்கு தேன் நிலவு என்ற கான்செப்டே இந்த படத்தில்தான் அறிமுகமாயிருக்க வேண்டும்.
நெஞ்சில் ஓர் ஆலயம்
எங்கிருந்தாலும் வாழ்க என்று காதலியை வாழ்த்த எப்படிப்பட்ட மனம் வேண்டும்? . காதலியின் நோயாளி கணவன், டாக்டரான காதலனிடம் சிகிச்சைக்கு வருகிறான். முடிவு என்ன?, ஒரு காட்சியைத்தவிர முழுக்க முழுக்க மருத்துவமனை செட்டிலேயே எடுக்கப்பட்ட படம். தில் ஏக் மந்திர் என இந்தியில் இவராலேயெ எடுக்கப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது. எங்கிருந்தாலும் வாழ்க,நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் போன்ற கண்னதாசனின் பாடல்கள் இன்றும் முனுமுனுக்கப்படுவை. கல்யான் குமார்,தேவிகா, முத்துராமன் நடித்தது. இதில் தான் முத்துராமன் நோயாளி கணவனாக அறிமுகமானார்.
காதலிக்க நேரமில்லை
இன்னும் நூறு ஆன்டுகள் கழித்து யாரும் தமிழ்சினிமாவின் டாப் டென் காமெடி படங்கள் லிஸ்ட் போட்டாலும் இந்த படம் அதில் இருக்கும். முத்து ராமன், ரவிச்சந்திரன்,பாலையா,நாகேஷ், காஞ்சனா,சச்சு நடித்தது. விஸ்வனாதன் வேலை வேணும் என்ற பாடல் மிக பிரபலம். டைரெக்டராக ஆசைப்படும் நாகேஷ் பாலையாவிடம் கதை சொல்லும் சீன் கிளாசிக். அதே போல் சச்சுவை நடிகையாக மாற்றும் முயற்சிகளும். காதலுக்காக சொல்லும் பொய்கள்,ஆள்மாறாட்டம் என இப்பொது பார்த்தாலும் இருக்கையில் இருந்து எழவிடாது
சுமைதாங்கி
மயக்கமா? கலக்கமா? வாழ்விலே குழப்பமா? என்னும் பாடல் இடம் பெற்ற படம். தன் குடும்பத்தாராலேயே வஞ்சிக்கப்படும் ஒருவன் கிருத்துவ சன்னியாசியாக மாரும் கதை. ஜெமினி கணேசன் இந்த பாத்திரத்தில் கலக்கியிருப்பார்
வெண்ணிற ஆடை
ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி,ஸ்ரீகாந்த் ஆகியோர் அறிமுகமான படம். மனசிதைவு அடைந்த இளம் விதவையை மனநோய் மருத்துவர் சரிப்படுத்தும் கதை. இந்த படத்துக்கு தான் ஹேமமாலினியை ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்து நிராகரித்தார். பின்னர் அவர் இந்தி திரையுலகின் கனவுக்கன்னி ஆனார்
50 ஆண்டுகளுக்கு முன்பே அவர் கையாண்ட கதை களங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. அடுத்த பதிவில் எம் ஜி ஆர்,சிவாஜி,கமல்,ரஜினி ஆகியோருடன் எடுத்த படங்களை எழுதுகிறேன்.
புகைப்பட உதவி
பதிவர்கள் தகவல்களை பகிர்ந்து கொண்டால் மிக உதவியாய் இருக்கும்
19 comments:
1998ல் ஒரு வார இதழில் வந்த சூப்பர் டூப்பர் ஹிட் தொடர்கதையில் இவரை பற்றி வந்த செய்திகளை நீங்கள் சேர்க்க மாட்டீர்கள் என்பதால் நான் சொல்லவில்லை :) :)
-
இதழையும் கதையையும் கண்டுபிடிப்பவர்களுக்கு “சினிமா திலகம்” பட்டம் வழங்கப்படும்
pruno i will try.
me the third
//1998ல் ஒரு வார இதழில் வந்த சூப்பர் டூப்பர் ஹிட் தொடர்கதையில் இவரை பற்றி வந்த செய்திகளை நீங்கள் சேர்க்க மாட்டீர்கள் என்பதால் நான் சொல்லவில்லை :) :)
//
ஆஹா என்னது? இப்படி சொல்லி பாதியில நிறுத்திட்டீங்களே? சந்தியா அவர்கள் காலில் விழுந்து தன் மகளுக்கு வாய்ப்பு கேட்டார் என எழுதினாரே, அதுவா?
அருமையான நபரைப் பற்றி அருமையான பதிவு.
இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் கமல் ரஜினி இருவரையும் மிக நன்றாக இயக்கி இருப்பார்.
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...
நர்சிம்
//1998ல் ஒரு வார இதழில் வந்த சூப்பர் டூப்பர் ஹிட் தொடர்கதையில் இவரை பற்றி வந்த செய்திகளை நீங்கள் சேர்க்க மாட்டீர்கள் என்பதால் நான் சொல்லவில்லை :) :)
//
இதுக்குத் தான் அதிகமா கிசுகிசு படிக்கக் கூடாது:)))
பக்கவாத நோய்தாக்கிய நிலையிலும் இன்றும் தினமும் சினிமா பார்க்கும் பழக்கத்தை மட்டும் மாற்றிக்கொள்ளவில்லை இவர் :)
ராப்,குட்டி பிசாசு,நர்சிம்,அப்துல்லா
வருகைக்கு நன்றி
நேற்றுதான் அழகே உன்னை ஆராதிக்கிறேன் பார்த்தேன்.
மிகச்சிறப்பான பாடல்கள் நிறைந்த படம். படமாக்கப்பட்ட விதம் சரியில்லையெனத் தோன்றியது.
முக்கோணக்காதல் கதையை பல்வேறு கோணங்களில் சொல்லிய டைரக்டர் இவராகத்தான் இருப்பார்.
நிறைய ஆங்கில வார்த்தைகள், ஏ ஜோக்ஸ் வசனங்கள் என முற்போக்கு இயக்குனர்.
என்னைக் கவர்ந்த இயக்குனர்களில் ஒருவர்.
பதிவிற்கு மிக்க நன்றி, முரளி கண்ணன்.
நேற்றுதான் அழகே உன்னை ஆராதிக்கிறேன் பார்த்தேன்.
மிகச்சிறப்பான பாடல்கள் நிறைந்த படம். படமாக்கப்பட்ட விதம் சரியில்லையெனத் தோன்றியது.
முக்கோணக்காதல் கதையை பல்வேறு கோணங்களில் சொல்லிய டைரக்டர் இவராகத்தான் இருப்பார்.
நிறைய ஆங்கில வார்த்தைகள், ஏ ஜோக்ஸ் வசனங்கள் என முற்போக்கு இயக்குனர்.
என்னைக் கவர்ந்த இயக்குனர்களில் ஒருவர்.
பதிவிற்கு மிக்க நன்றி, முரளி கண்ணன்.
என்ன தான் தரத்தில் சிறந்த படமாக இருந்தாலும், வசூல் பெரிய அளவில் இல்லாததால் அவருக்கு ஒரு முறை பண நெருக்கடி வந்தது. அதை தெரிந்து எம்.ஜி.ஆர் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். அந்த படம் தான் உரிமைக் குரல். விட்ட பணம் எல்லாவற்றையும் இந்த படத்தில் எடுத்தார் ஸ்ரீதர்
செம படங்க எல்லாமே
எனக்கு கல்யாண பரிசு நெஞ்சில் ஓர் ஆலயம் இந்த இரண்டு படமும் எனக்கு ரொம்ப பிடிக்கும் இதில் எனக்கு எங்கிருந்தாலும் வாழ்க, நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் பாடலும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
இந்த பாட்டை கேட்டால் என்ன பிரச்சனை என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள் அதனாலாயே இவற்றை கேட்க முடிவதில்லை :-)) இவங்க இம்சைக்கு பயந்தே இதை கேட்பதில்லை.
ஸ்ரீதர் புகைப்படம் சூப்பர்
இளைய பல்லவன், ப்ளீச்சிங் பவுடர், கிரி வருகைக்கு நன்றி
//1998ல் ஒரு வார இதழில் வந்த சூப்பர் டூப்பர் ஹிட் தொடர்கதையில் இவரை பற்றி வந்த செய்திகளை நீங்கள் சேர்க்க மாட்டீர்கள் என்பதால் நான் //
குமுதத்தில் வந்த "நடிகையின் கதை"தானே?!:-)
தமிழ் திரையுலகில் முற்போக்கு இயக்குனர் என்ற பெயரில் அழைக்கப்படக் கூடிய ஒரு சிலரில் இவரும் ஒருவர்.
கல்யாணப் பரிசு,நெஞ்சில் ஓர் ஆலயம் இந்த இரண்டு படம் போதும்,இவர் பற்றி சொல்ல.
அருமையான பதிவிற்கு நன்றி
வருகைக்கு நன்றி லோஷன்
அன்னாருக்கு ஆழந்த அஞ்சலிகள், தமிழ் திரையுலகின் மைல்கல்.
எனது மனம் கவர்ந்த இயக்குனர்களுள் இவரும் ஒருவர்.அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...
Thirai ulagin Marumalarci, vidivelli,
nanriketta Mandarada , Nam arintha padamada. Ulagam ullaluvum Marukamudiyatha, Maraikkamudiyatha Arputha manither.Vazga avar Pugah Pllandu.
T,B,Srinivasulu
Post a Comment