September 13, 2008

ஒரு நாள் கிரிக்கெட்டின் போக்கை மாற்றிய ஐவர்

37 வருடமாக ஆடப்பட்டு வரும் இது, தோன்றியதிலிருந்து பல மாற்றங்களை சந்தித்துள்ளது. அதில் முக்கிய மாற்றங்களை கொண்டு வந்தவர்கள் இவர்கள்.


ஜாவேத் மியான்டாட்


சாப்ட் ஹேண்ட் சிங்கிள் இவரது சிறப்பு. தட்டி தட்டி எடுக்கப்படும் இவருடைய சிங்கிள்கள் எதிர் அணியின் வசமிருக்கும் ஆட்டத்தை தட்டிப் பறித்து விடும். 15 முதல் 40 ஓவர் வரையில் இந்த வகை சிங்கிள்கள் எந்த அணிக்கும் கைகொடுக்கும். டீன் ஜோன்ஸ், பேவன் ஆகியோர் இதை அடுத்த தளத்துக்கு எடுத்து சென்றனர். இந்த வகை ஆட்டத்தை ஒரு நாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக முதலில் பயன்படுத்தியவர் இவரே.


ஜான்டி ரோட்ஸ்

இவர் வருகைக்கு முன் விக்கெட் கீப்பர் மட்டுமே ஸ்பெசலிஸ்ட் பீல்டர். பேக்வர்ட் பாயிண்ட்ம் ஒரு ஸ்பெசலிஸ்ட் ப்ளேஸ், 30 முதல் 40 ரன் தடுக்க முடியும் என காட்டியவர். இவர் வருகைக்கு பின்னர்தான் எல்லா அணிகளிலும் பீல்டிங் புரட்சி ஏற்பட்டது

கிரேட் பாட்ச்

நம்ம ஸ்ரீகாந்த்,அதற்கு பின்னால் ஜயசூரிய/கலுவித்தரன அப்படி ஆடியிருந்தாலும், வெற்றிகரமாக முதலில் நடத்திக்காட்டியவர் இவரே. அதிரடி துவக்க ஆட்டக்காரர்கள் இல்லாமல் இன்று எந்த அணியும் இல்லை. 1992 ல் இவர் அம்புரோஸ்,அக்ரம் போன்றோரை அடித்ததைப் பார்த்துதான் ரணதுங்காவுக்கே இந்த ஐடியா வந்திருக்க வேண்டும்.

பாப் ஊல்மர்

கிரிக்கெட்டில் கோச்சுகளின் முக்கியதுவத்தை உணர வைத்தவர். முதல் லேப் டாப் கோச். இவர் வருகைக்கு பின்னரே எதிர் அணியினரின் பலவீனத்தை அக்கு வேறு ஆணி வேறாக பலரும் அலசத்தொடங்கினர்.

கில்க்ரிஸ்ட்

பலத்த எதிர்ப்புக்கிடையில் ஹீலேவுக்கு பதிலாக அணியில் இடம்பிடித்தவர். அதற்க்கு முன்னால் விக்கெட் கீப்பர் எடுக்கும் ரன்கள் போனஸ் என்று இருந்த நிலையை மாற்றியவர். இப்பொதெல்லாம் எந்த அணியிலும் விக்கெட் கீப்பர் சிறந்த மட்டையாளராக இருக்க இவர் தான் காரணம்

ஐ சி சி ஆட்டத்தை பிரபலப்படுத்த பல புதிய விதிகளை கொண்டு வந்தது. அதில் பல தோல்வி அடைந்தன (எ.கா. சூப்பர் சப் ரூல்). ஆனால் இந்த தனிப்பட்ட சாதனையாளர்கள் தங்கள் திறமையால் ஆட்ட்டத்தை சுவராசியமாக்கினார்கள். அமைப்புகள் தேவை தான், ஆனால் அதை விட முக்கியம் ஆட்டக்காரர்கள்.

8 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

முரளி கண்ணன், கிரேட்பேச் நியூசிலாந்து விக்கட்கீப்பர்தானே? (சரியா ஞாபகமில்லை).

வீக்கட்கீப்பர்களில் முதலில் ரன்சேகரிப்பவராக கில்க்றிஸ்டைச் சொல்லியதால் கேட்கிறேன்.

வித்தியாசமான பார்வையைத் தந்திருக்கிறீர்கள்... அதுவும் மாற்றியமைத்து என்றால் விளையாடுபவர்கள் மட்டுமில்லாமல் கோச்சையும் சேர்த்தது.. நன்றாக இருந்தது.

முரளிகண்ணன் said...

சுந்தர் சார்,
மார்க் கிரேட் பாட்ச் துவக்க ஆட்டக்காரர் மட்டுமே. விக்கெட் கீப்பர் அப்போது வேறொருவர். துஜான் (மே.இ.தீவுகள்), ஹீலே (ஆஸி), ரிச்சர்ட்சன் (தெ. ஆ), அலன் நாட் (இங்கி) போன்றோர் நல்ல மட்டையடி வீரர்களாய் இருந்தாலும் கில்க்ரிஸ்ட் வந்தபின் தான் இந்த மாற்றம் நடைபெற்றது.

கார்க்கிபவா said...

இதில் டேவ் வாட்மோரையும் ரிச்சர்ட்ஸயிம் சேர்த்திருக்கலாம் என்பது என் கருத்து..ந‌ல்ல விஷயம்..

narsim said...

முரளி கண்ணன்..

நல்ல பகுப்பாய்வு..

நான் அடிக்கடி நண்பர்களிடம் சொல்வது "கிரேட்பாட்ச்" ஆரம்பித்து வைத்த மேட்டர்தான் அதிரடி அடி என்று..

பாகிஸ்தானின் பாஸித் அலியும் ஒரு முக்கியமான நபர்.. அவரின் ஸ்டைலும் 5 ஓவர் சிங்கிள்ஸ் அப்புறம் அலட்டாமல் அடி..

நல்ல பதிவு

நர்சிம்

முரளிகண்ணன் said...

வாட் மோரை சேர்க்க நினைத்தேன். ஆனால் அவருக்கு முன்னரே ஊல்மர் சாதித்ததால் விட்டு விட்டேன்.

ரிச்சர்ட்ஸ் என்னுடைய பேவரிட் வீரர். அவரைப்பற்றி தனியே எழுதலாம் என்றிருக்கிறேன்

முரளிகண்ணன் said...

நர்சிம் வருகைக்கு நன்றிகள்.

பாசித் அலி அடுத்த மியான்டாட்டாக வருவார் என எதிர்பார்த்தேன்.
ஒரு டெஸ்ட்டில் வார்ன்னும் ஹீலியும் சேர்ந்து அவரை எக்ஸ்போஸ் செய்தார்கள். அதன்பின் அவர் சோபிக்கவில்லை. அதற்கு பாக் கிரிக்கெட் அரசியலும் காரணம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஒஹ்.. நன்றி.. ஞாபகக்குறைவு.. :)

பேட்ஸ்மென், கீப்பர், கோச் என்பதோடு ஒரு பந்துவீசுபவரையும் சேர்த்திருக்கலாமோ.. (ஆனால் அப்படி தடம் பதித்த பௌலர் ஞாபகம் வரவில்லை என்பதும் உண்மைதான்)

முரளிகண்ணன் said...

சுந்தர் சார்,

கடைசி நேரத்தில் வீசப்படும் யார்க்கர் மற்றும் ஸ்லோ பால், தூஸ்ரா போன்றவை ஆட்டப்போக்கை மாற்றினாலும், பலரும் அதில் விற்பன்னர்கள் என்பதால் விட்டு விட்டேன்.