ஒளிப்பதிவாளர்கள் இயக்குநராவது ஒரு நீட்சியாகவே கருதப்
படுகிறது. பாலுமகேந்திரா, அசோக்குமார், என் கே விஸ்வநாதன், கர்ணன் போன்றோர் சென்ற தலைமுறையில் இயக்குநரானார்கள். இந்த தலைமுறையில் பல சாதனை புரிந்த ஒளிப்பதிவாளர்கள் இயக்குநராக மாறியிருக்கிறார்கள்.
பி சி ஸ்ரீராம்
இப்போது இங்கும்,இந்தியிலும் வலம் வரும் பெரிய ஒளிப்பதிவாளர்கள் இவரின் வாரிசுகளே. மௌனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், தேவர்மகன் போன்ற மறக்க முடியாத படங்களை ஒளிப்பதிவு செய்தவர். ஆனால் இயக்கத்தில்?
மீரா
விக்ரம், ஐஸ்வர்யா இணை, இளையராஜாவின் ‘ஓ பட்டர் ப்ளை’ போன்ற பாடல்கள். படம் படுதோல்வி. திரைக்கதை மோசமாக இருந்த படம்.
குருதிப்புனல்
ரஜினியின் முத்து படத்துடன் வெளியாகி தாக்குப்பிடித்த படம். கமல்-நாசர் விசாரணை காட்சிகள் அருமையானவை. கமலின் கதை வசனமும் பெரும்பலம்.
வானம் வசப்படும்
இப்படி ஒரு படம் வெளியானதா? என்று கேட்கும் அளவில் அமைந்த படம்.
ராஜீவ் மேனன்
பம்பாய் பட ஒளிப்பதிவாளர். விளம்பர பட பிஸ்தா. பாடகி கல்யாணி மேனனின் மகன். ரஹ்மானின் சிறு வயது தோழர். பம்பாய் படத்துக்கு நாயகனாக மணிரத்னம் முதலில் இவரைதான் கேட்டார்.
மின்சார கனவு
அரவிந்த் சாமி, பிரபு தேவா, கஜோல், ரஹ்மானின் ஊல்லலா,வெண்ணிலவே,தங்கத்தாமரை இருந்தும் ஏவி எம் ரயில் விட்டு ஒட்ட வேண்டியதாயிற்று.
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
அஜீத்,அப்பாஸ்,மம்முட்டி,தபு, ஐஸ்வர்யா ராய் இருந்தும், சுஜாதா வசனம், ரஹ்மான் படல்கள் (என்ன சொல்ல போகிறாய்) இருந்தும் படம் எதிர்பார்த்த படி அமையவில்லை.
தங்கர்பச்சான்
மலைச்சாரல் படத்தின் மூலம் அறிமுகமாகி காதல் கோட்டை, காலமெல்லாம் காதல் வாழ்க, மறுமலர்ச்சி, பொரியார் போன்ற பல படங்களை ஒளிப்பதிவு செய்த தங்கர்பச்சான் பின்னர் அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்களை இயக்கினார். அடிப்படையில் இவர் எழுத்தாளர் என்பதால் இவர் படங்களின் கதைக்களன்கள் வித்தியாசமாக இருந்தன.
அழகி – இவரது கல்வெட்டு என்னும் சிறுகதையை தழுவியது.
ஒன்பது ரூபாய் நோட்டு – இவர் கதையே
சொல்ல மறந்த கதை – நாஞ்சில் நாடன் நாடனின் தலை கீழ் விகிதங்கள் நாவலை தழுவியது.
தென்,மேற்கு மாவட்ட வாழ்க்கையை மட்டுமே பதிவு செய்து கொண்டிருந்த தமிழ்சினிமா இவரின் வருகைக்குப்பின்னரே வட மாவட்டங்களையும் பதிவு செய்யத்தொடங்கியது.
ஜீவா
ஜெண்டில் மேன், காதலன், இந்தியன், குஷி, ரன் என ஹிட் படங்களாக ஒளிப்பதிவு செய்தவர்.
12 பி
ஹாரிஸ் ஜெயராஜ் தான் இதற்கு மட்டுமல்லாமல் இவரின் அனைத்து படங்களுக்கும் இசை. பாக்யராஜ் திரைக்கதை அமைப்பில் ஆலோசனை வழங்கினார். அழகான நடிகைகளுக்கு ஜோடியாக நடிக்கும் அதிர்ஷ்டம் மட்டும் வாய்த்த ஷாம் ஹீரோ. ஜோதிகா,சிம்ரன் நாயகியர். படம் சுமார்
உள்ளம் கேட்குமே
ஆர்யா, அசின் இதில் அறிமுகம், லூசு கேரக்டர் புகழ் லைலா, ஷாம், பூஜா நடித்தது. சுஜாதா வசனம். ஓ மனமே, மழை மழை பாடல்கள் சூப்பர் ஹிட். படமும் ஹிட்
உன்னாலே உன்னாலே
வினய், தனிஷா அறிமுகம். உடன் சிடு சிடு சதா. எஸ். ராமகிருஷ்ணன் வசனம். ஆண் பெண் ஈகோ, பொஸஸிவ்னெஸ் ஆகியவற்றை பேசிய படம். உன்னாலே உன்னாலே, ஜூன் போனால் போன்ற பாடல்கள். படமும் ஓரளவு ஓடியது.
தாம்தூம்
துரதிஷ்டவசமாக இப்பட படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றபோது ஜீவா மரணமடைந்தார். எஸ். ராமகிருஷ்ணன் வசனம். பாடல்களும் சூப்பர். ஜெயம் ரவி, லஷ்மிராய். கங்கனா ராவத் ( இங்கு அறிமுகம்) நடித்தது. இப்பொது ஓடுக்கொண்டிருக்கிறது.
கே வி ஆனந்த்
தேன்மாவின் கொம்பத் படத்துக்காக தேசியவிருது வாங்கினார். காதல்தேசம்,முதல்வன்,சிவாஜி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.
கனா கண்டேன்
பிரிதிவிராஜ் வில்லனாக அறிமுகமான படம். ஸ்ரீகாந்த,கோபிகா நடித்த திரில்லர். சு-பா கதை,வசனம். இவரும் சு ரேஷ் பா லா க்களும், சூப்பர் நாவல் காலத்திய பழக்கம். சுபாவின் கதைகளுக்கு இவர் போட்டோ எடுத்துக்கொடுத்தது முதல்படி. அப்போதே இவரை புகழந்து எழுதியிருப்பார்கள்.
அயன்
சூர்யா,தமன்னா நடிக்க ஏவி எம் தயாரிப்பில் வளர்ந்து கொண்டிருக்கும் படம்
ரவிவர்மன்
சாந்தம் படத்திற்காக உலக அளவிலான விருது பெற்றவர். அந்நியன், தசாவதாரம் பட ஒளிப்பதிவாளர். தற்போது மாஸ்கோவின் காவிரி படத்தை இயக்கிகிறார் ஆஸ்கார் ரவிசந்திரன் தயாரிப்பு.
சந்தோஷ்சிவன்
தளபதி பட கேமராமேன். மல்லி, டெரரிஸ்ட், அசோகா (இந்தி) ஆகிய படங்களை இயக்கினார். விருதுகளை குவித்தவர்
இதுதவிர மணிகன்டன்,ரத்னவேல், ஆர் டி ராஜசேகர் என பலர் பட இயக்கபோகிறார்கள்.
வாய்ப்புகளுக்கு காரணம்
இயக்குநர்களின் கண்ணாய் இருப்பதால், எந்த உணர்ச்சி/ காட்சிக்கு எப்படி ஷாட் வைக்க வேண்டும் என்பதை எளிதில் புரிந்து கொண்டு விடுகிறார்கள்
தயாரிப்பாளருடன் எளிதான தொடர்பில் இருப்பது ஒரு சாதகமான அம்சம். வேலை தெரிந்தவர் என எளிதில் புரியவைக்க முடியும்.
பழக்கத்தால் நாயகன், நாயகி கால்ஷீட் பெறுவதும் எளிது.
பாதக அம்சம்
திரைக்கதை அமைப்பு, வசனம் எழுதுதல் போன்றவை உதவி இயக்குநராக இருந்து வருபவர்களுக்கு எளிதில் கைகூடும். இவர்கள் அதிலே வீக். எனவே பெரிய எழுத்தாளர்களை பிடித்துக்கொள்கிறார்கள்.
நல்ல திரைக்கதை அமைந்துவிட்டால் கலக்கிவிடுவார்கள். அயன், மாஸ்கோவின் காவிரியை எதிர்பார்க்கலாமா?
21 comments:
திரைப்படத் தொழில் குறித்த உங்களது தொடர்பதிவுகளை தொடர்ந்து வாசிக்கிறேன். உலகமறியாத பல தகவல்களை சுவாரஸ்யமாக தொகுத்து வருகிறீர்கள். தொடரவும்.
முரளி கண்ணன்,
மிக துல்லியமான பகுப்பாய்வு.
ஜீவாவின் இறப்பு இழப்பே..
குருதிப்புனல்.. நான் ரசித்த படங்களில் ஒன்று..
முரளி தொடர்ந்து கலக்குங்கள்..
நர்சிம்
வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி லக்கிலுக், நர்சிம்
நன்றி!
//வானம் வசப்படும்
இப்படி ஒரு படம் வெளியானதா? என்று கேட்கும் அளவில் அமைந்த படம்.//
ஆனால் பாடல்கள் அனைத்தும் அருமை. கேட்டிருக்கிறீர்களா
பாலு மகேந்திரன் இந்த தலைமுறை தானே :) :)
புருனோ பாலு மகேந்திரா 70களின் மத்தியிலேயே தன் பயனத்தை ஆரம்பித்துவிட்டார் மேலும் அவர் இங்கு டைரெக்டராகவே (கோகிலா- கன்னடம்)அறிமுகமாகி பார்க்கப்பட்டார்.
நான் யானையெல்லாம் இல்லை. நீங்க இதை தொடுறதில்ல . நீங்க, ராப் எல்லாம் எழுதினா நான் மறுபடி பின்னூட்டம் மட்டும்தான் போட வேண்டியிருக்கும்
அருமையான தொகுப்பு, திரைத்துறையில் உள்ளீர்களா..? தகவல்கள் எல்லாம் பக்காவா உள்ளது
நல்ல பகுப்பாய்வு. தொடர்ந்து வாசிக்கிறேன்.
சந்தோஷ்சிவன் Hollywood ல் Elizabeth - The golden Age எனுமட் படதடதையும் இயக்கியிருக்கிறார். நல்ல ரேட்டிங்.
மீஜிக் நம்ம தல றஃமான் ( 2 பேரில் எருத்தர்)
டொன்லீ
\\திரைத்துறையில் உள்ளீர்களா..? \\
அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.
சுபாஷ்,
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.
தங்கர் பச்சான்????
---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)
தறுதலை அவர்களே,
\\தங்கர் பச்சான்????\\
தங்கள் நினைவுறுத்தலுக்கு நன்றி.
பதிவுல் இணைத்துவிட்டேன்
நல்ல பகுப்பாய்வு.
நான் பாடும் பாடல் என்கிற படத்தில் 'பாடவா உன் பாடலை', அப்படிங்கற பாடல் வரும் இல்லைங்களா, அதில் அம்பிகா, மோகன் பார்ட்ல வருகிற கதை நிஜமாகவே, கல்யாணிமேனன் அவர்களின் வாழ்க்கையில் நடந்ததாம், அதனால்தான் அவர் திரைப்படங்களில் பாடுவதை நிறுத்தினாராம்:(:(:( அதைக்கேள்விப்பட்டுத்தான் சுந்தர் ராஜன் சார் அந்தப் பின்னணியை இதில் வைத்தாராம். (தவறான தகவலாக இருந்தால் மன்னிச்சுக்கோங்க)சுஜாதா படத்தில் வரும் 'நீ வருவாய் என' என்ற பாடல் கல்யாணி மேனன் பாடியதில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று
ரொம்ப நல்லா தொகுத்திருக்கீங்க.. பாராட்டுகள்.. :)
விஜய் மில்டனை விட்டுட்டீங்களே..!
வருகைக்கு நன்றி கடையம் ஆனந்த்
வருகைக்கு நன்றி
ராப்
பீமோர்கன்
\\ரொம்ப நல்லா தொகுத்திருக்கீங்க.. பாராட்டுகள்.. :)
விஜய் மில்டனை விட்டுட்டீங்களே..!
\\
விரைவில் இணைத்து விடுகிறேன் நன்றி
Post a Comment