January 15, 2025

ராம நாராயணன்

இண்டஸ்ட்ரிகளில் முன்னாளில் சீக்வன்சியல் இன்ஜினியரிங் முறை இருந்தது. ஒரு பிராசஸ் முடிந்த பின்னரே அடுத்த பிராசஸ் துவங்குவார்கள். அதனால் lead time அதிகமாகிறது என்று concurrent engineering முறை கொண்டு வந்தார்கள். ஒரு ப்ராடக்டிற்கான வேலை இன்னும் சில ஒர்க் ஸ்டேஷன்களிலும் நடைபெறும். சைமல்டேனியஸ் ப்ராசஸ். இதை திரைத்துறையில் மிகவும் எபக்டிவ்வாக பயன்படுத்தியவர் இயக்குனர் ராமநாராயணன் அவர்கள். அவருடைய படங்கள் எல்லாமே குறைந்தது நான்கு வாரம் ஓடும். அப்படி நான்கு வாரம் ஓடி விட்டாலே தயாரிப்பாளரிலிருந்து தியேட்டர் அதிபர் வரை எல்லோருக்கும் தேவையான லாபம் கிடைத்து விடும். ராமநாராயணனுடைய கொள்கை நான் படமெடுக்கும் நாட்களை விட ஒரு நாளாவது படம் அதிகம் ஓட வேண்டும் என்பதே. அதனால் அவர் தன் எல்லா படங்களையும் நான்கு வாரத்திற்குள் முடித்து விடுவார். யானை,பாம்பு, நாய் என எதை வைத்து எடுத்தாலும் அவ்வளவு வேகமாக முடித்து விடுவார். அவர் அதற்காக வலுவான அசோசியேட் இயக்குனர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் குழு வைத்திருந்தார். ஒருவர் ஒரு இடத்தில் சண்டைக் காட்சிகளை படமாக்கினால் அதில் தொடர்பு இல்லாத ஆட்களை கொண்ட காட்சிகளை இன்னொரு உதவி இயக்குனர் இன்னொரு இடத்தில் இயக்கிக் கொண்டிருப்பார். ஓரிடத்தில் பாடல் காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருக்கும். இப்படி ஒவ்வொரு இடங்களிலும் காட்சிகள் எடுக்கப்பட்டு கொண்டிருக்கும் இவர் எல்லா இடங்களுக்கும் சென்று மேற்பார்வையிட்டு கரெக்ஷன் சொல்லிக் கொண்டிருப்பார். மிகுந்த கம்யூனிச தாக்கம் உள்ள இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு வந்தவர் ராமநாராயணன். அவருடைய சுமை, சிவப்பு மல்லி, பட்டம் பறக்கட்டும் எல்லாமே அத்தகைய தாக்கத்தை கொண்டிருந்த படங்கள். சிவப்பு மல்லி படம் விஜயகாந்த்திற்கு ஏராள ரசிகர்களை பெற்று தந்தது. ஆனால் அதன் பின்னர் அவர் முழுக்க கமர்சியல் ரூட்டிற்கு மாறினார். நன்றி படத்தில் அர்ஜுன அறிமுகப்படுத்தினார். ஆடி வெள்ளி மற்றும் துர்கா ஆகிய இரண்டு படங்கள் செய்த கலெக்ஷன் சாதனையால் அவர் அதிகமாக விலங்குகள் மற்றும் பக்தி படங்கள் இயக்கலானார். இடையிடையே காமெடி படங்கள் வேறு. அவர் இயக்கிய நூறாவது திரைப்படம் திருப்பதி ஏழுமலை வெங்கடேசா மிகப்பெரிய கலெக்சன். ஆடி வெள்ளி, துர்கா படங்களின் கதையை வைத்துக்கொண்டு அவர் எல்லா திரையுலகிற்கும் சென்றார். போஜ்புரி மொழியிலும் பல படங்களை இயக்கினார். சின்னக் கல்லு பெத்த லாபம் என்கிற கொள்கையையும் கடைசிவரை கடைபிடித்தவர் ராமநாராயணன். அவருடைய படங்கள் எல்லாமே லோ பட்ஜெட் படங்கள் தான். எப்படியும் யார் கையையும் கடிக்காது. ஆனால் ஹிட் ஆகிவிட்டால் ஏகப்பட்ட லாபம் கிடைக்கும். ஆடி வெள்ளி திரைப்படம் வாங்கியவர்களுக்கு 5 மடங்கு லாபம் கொடுத்தது. துர்கா அதற்கு மேல் கொடுத்தது என்பார்கள்.

No comments: