September 11, 2008

தமிழ் சினிமாவின் தங்க ஆண்டு - 1989

1989 ஆம் வருடம் சினிமா துறையில் இருந்த எல்லொருக்கும் தங்க வருடமாயிருந்தது. அந்த ஆண்டு வெளியான பல படங்கள் (டப்பிங்) உட்பட பெரு வெற்றி பெற்றன. அந்த படங்கள் அதில் இடம் பெற்ற புதியவர்களுக்கு முகவரியாகவும், மற்றவர்களுக்கு ஒரு மைல்கல் படமாகவும் அமைந்தன. அதில் முக்கிய படங்களைப் பார்ப்போம்

ராஜாதி ராஜா
ராஜ் டிவிக்காகவே எடுத்த படம் என்று கூட சொல்லலாம். இது வரை அவர்கள் 100 முறைக்கு மேல் ஒளிபரப்பியிருப்பார்கள். அவர்கள் வீடியொ கேசட் வெளியிட்ட போது அதிகம் விற்பனையானவற்றில் இதுவும் ஒன்று.அருமையான பாடல்கள், ரஜினியின் அப்பாவி நடிப்பு என களைகட்டிய படம்

வருஷம் 16
சைனீஸ் பட்லர் குஷ்பூவையும், கார்த்திக்கின் குறும்பான நடிப்பையும் மறக்க முடியுமா?. பாடல்கள் இன்றும் பலரால் கேட்கப்பட்டு வருகின்றன. அப்பொதெல்லாம் பல உதவி இயக்குனர்கள் "வருஷம் 16 மாதிரி ஒரு பேமிலி சப்ஜெக்ட் வச்சிருக்கேன்" என்று தான் ஆரம்பிப்பார்கள்

அபூர்வ சகோதரர்கள்
இன்றும் பல கல்லூரி விழாக்களில் யாராவது அப்பு வேஷம் போடுகிறார்கள். காதல் தோல்வி அடைந்தவர்களின் (இப்பல்லாம் தோல்வி அடையுதா காதல்?) தேசிய கீதமான உன்னை நெனைச்சேன் பாடலை யாரால் மறக்க முடியும்?.

கரகாட்டக்காரன்
வாழைப்பழம், இப்ப யாரு வச்சுருக்கா? எல்லாம் சாகாவரம் பெற்றுவிட்டன. பாடல்கள் பஞ்சாமிர்தம். ராமராஜன் என்றாலே நினைவுக்கு வருவது.

புதுப் புது அர்த்தங்கள்
சித்தாராவை இங்கு அறிமுகப்படுத்திய படம். விவேக்கிற்க்கு கவனக் குவிப்பை ஏற்படுத்திய படம். யாரால் மறக்க முடியும் கேளடி கண்மனியையும்,கல்யாண மாலையையும்?

புதிய பாதை

பார்த்திபன் நடித்து,இயக்கி அறிமுகமான படம். 40 படம் நடிச்சு எங்களுக்கு கிடைச்ச ஆக்‌ஷன் இமேஜ் ஒரு படத்திலேயே உனக்கு கிடச்சுருச்சே என ரஜினி பாராட்டிய படம். அனாதையாக்கப்படுதலின் சோகத்தை கன்னத்தில் அறைந்து சொல்லியிருப்பார்கள். இன்று வரை இதுதான் பார்த்திபனின் சிறந்த படம்.

இதயத்தை திருடாதே
இன் அன்ட் அரௌண்ட் 35 எல்லோரும் கட்டாயம் பார்த்திருப்பார்கள். தியேட்டர் எல்லாம் வாலிப அலை. காவியம் பாடவா தென்றலே, ஓம் நமஹா, ஓ பாப்பா லாலி இப்பவும் காதுக்குள் கேட்கிறது.

இதுதான்டா போலிஸ்
கவர்ச்சி, காமெடி இல்லை, பாடல் ஆவரேஜ், யாரோ நடிச்சது, டப்பிங் இப்படி எல்லாமே மைனஸ். ஆனால் படம், பட்டி தொட்டி எல்லாம் பட்டை மட்டுமில்லாமல் லவங்கம்,கிராம்பு எல்லாவற்றையும் கிளப்பி ஓடியது. இன்னும் இவர் பெயர் இதுதான்டா போலிஸ் ராஜசேகர் தான்.

இது தவிர வெற்றிவிழா,மாப்பிள்ளை,ராஜா சின்ன ரோஜா,பாண்டி நாட்டுத் தங்கம் போன்ற வெற்றி படங்களும் வந்தன.
இந்த படங்கள் எல்லாமே (இ. போ தவிர) இசை - இளையராஜா.

இதெல்லாம் போதாதென்று இந்தியில் இருந்து கயாமத் ஸே கயாமத் தக், தேஸாப் போன்ற படங்களும் டப் செய்யப்பட்டு அவையும் இங்கு வெற்றி பெற்றன.


1989 போல இன்னொரு வருடம் வருமா என வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் மட்டுமல்ல ரசிகன் ஆகிய நானும் காத்திருக்கிறேன்

32 comments:

narsim said...

அருமையான படங்கள்.. வருஷம் 16.. என்றும் 16..

நல்ல பதிவு..

நர்சிம்

வெண்பூ said...

நல்ல கலெக்ஷன் முரளி. இதில் இதயத்தை திருடாதே தவிர எல்லா படமும் பார்த்துள்ளேன். 20 வருடங்களுக்கு பிறகு நல்ல ப்ளாஷ்பேக்.

அட.. இந்த படமெல்லாம் வந்து 20 வருசம் ஆச்சா????

முரளிகண்ணன் said...

வாங்க நரசிம்,

@வெண்பூ இதயத்தை திருடாதே பார்க்கலைன்னா எப்படி? உங்க வயசு 27 ஆ?

வெண்பூ said...

//வாங்க நரசிம்,

@வெண்பூ இதயத்தை திருடாதே பார்க்கலைன்னா எப்படி? உங்க வயசு 27 ஆ? //

ஹி...ஹி... நான் மூணு வயசு கம்மியாவா தெரியுறேன்???

முரளிகண்ணன் said...

முப்பதான்னு கேட்கலாம்னு நினைச்சேன். ஆனா அந்த பளபளப்பான முகம் ஏமாத்திருச்சு. என்னோட கணக்கு அப்பொ 15 வயசு ஆள் எல்லாம் பார்த்திருப்பாங்க. பார்க்கலைன்னா 4,5 வயசு கம்மியாயிருக்கும்னு. என்னோட கணக்கு சரிதான்.

சரவணகுமரன் said...

//ராஜ் டிவிக்காகவே எடுத்த படம் என்று கூட சொல்லலாம்//

:-)

நல்ல பதிவு...

புது புது அர்த்தங்களும் அந்த வருடம் தானே வந்தது?

முரளிகண்ணன் said...

ஆமாம் சரவணகுமரன்,
அதை விட்டு விட்டேன்.
ஞாபகப் படுத்தியதற்க்கு நன்றி

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எப்படிங்க...? நிறைய சினிமா பாப்பீங்களோ??

கானா பிரபா said...

நல்ல பட்டியல்

ராஜாவின் முகத்தை வைத்தே பல படங்களின் வியாபாரம் பேசப்பட்டது ஒரு காலம்.

ராஜாதி ராஜாவை போன வாரம் மோசர் பேயர் டிவிடியாக வாங்கி பத்திரப்படுத்தியிருக்கிறேன்.

முரளிகண்ணன் said...

சுந்தர் சார்,
எங்கள் ஊரில் அப்போவெல்லாம் வேறு பொழுதுபோக்கு இல்லை.

தங்கள் வருகைக்கு நன்றி

முரளிகண்ணன் said...

வாருங்கள் கானா பிரபா. இளையராஜா அந்த ஆண்டு பட்டையை கிளப்பி இருந்தார்

புருனோ Bruno said...

வெற்றி விழா எந்த வருடம் வெளிவந்தது ?? 1989 தீபாவளி தானே

அது தவிர அந்த வருடம் தீபாவளிக்கு விஜய்காந்த நடித்த 3 படங்கள் வந்ததாக ஞாபக்ம் (அதில் ஒன்று சரித்திர படம், ஒன்று ராஜநடை என்று நினைக்கிறேன்)

ரஜினியின் மாப்பிள்ளை கூட 1989 தீபாவளி தானே

முரளிகண்ணன் said...

மிகச் சரி புருனோ.
விஜயகாந்த் நடித்த படம், மீனாட்சி கல்யாணம் என நினைக்கிறேன்.

எடுத்துக்கொடுத்ததற்கு நன்றிகள்.

முரளிகண்ணன் said...

புருனோ அவர்களே

அந்த படம் மீனாட்சி திருவிளையாடல்.

அதுதவிர

தர்மம் வெல்லும்,பொன்மனச்செல்வன், பொறுத்தது போதும், பாட்டுக்கு ஒரு தலைவன், என் புருஷன்தான் எனக்குமட்டும் தான் என 6 படங்கள்.

rapp said...

ஹை, சூப்பர் கலெக்ஷன். நான் முத முதல்ல நினைவு தெரிஞ்சு தியேட்டர்ல பார்த்த படம் ராஜாதி ராஜா. அடுத்த படம் அபூர்வ சகோதர்கள். நான் அப்போ யு கே ஜி படிச்சிக்கிட்டு இருந்தேன். ரெண்டு படமும் பார்த்த தியேட்டர் ஒரு போங்குத் தியேட்டர். இந்த காரணத்தாலயே இந்த ரெண்டு படமும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்:):):)

rapp said...

//ராஜாதி ராஜா
ராஜ் டிவிக்காகவே எடுத்த படம் என்று கூட சொல்லலாம். இது வரை அவர்கள் 100 முறைக்கு மேல் ஒளிபரப்பியிருப்பார்கள்.//

வெறும் நூறு முறையா? இப்படி கணக்க குறைச்சு ராஜ் டிவியோட விரோதத்தை சம்பாதிச்சுக்காதீங்க:):):) குறைஞ்சது ஆயிரம் முறைக்கு மேல போட்டிருக்க மாட்டாங்க:):):)

முரளிகண்ணன் said...

ராப்

போங்கு தியேட்டர் என்றால் உங்களுக்கு ப்ரீயா?

ராஜ் டிவி இந்த விஷயத்தில் செய்தது கின்னஸ் சாதனையே. இதை அவர்கள் கின்னஸுக்கு அனுப்பி, பின்னர் உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் படம் என விளம்பரம் செய்து கொள்ளலாம்.

பரிசல்காரன் said...

//(இப்பல்லாம் தோல்வி அடையுதா காதல்?) //

சரியான கேள்வி!

@ ராஜாதி ராஜா

ஒரு நல்ல பாட்டை படத்திலிருந்து தூக்கிவிட்டார்கள்.

@ வருஷம் 16

அந்த க்ளைமாக்ஸ்...

@ அபூர்வ சகோதரர்கள்

நாகேஷ் நடிப்பு

@ கரகாட்டக்காரன்

இளையராஜாவால் ஓடிய படம்!!!

@ பு.பு.அர்த்தங்கள்

கீதா நடிப்பு!

@ இதயத்தை திருடாதே

அந்த முத்தம் எவ்வளவு பரபரப்பாகப் பேசப்பட்டது!

@ இதுதாண்டா போலீஸ்

வாடா போடா டைட்டில்ஸ் கன்னாபின்னாவென்று ரிஜிஸ்டர் செய்யப்பட்டது இதற்குப் பின்தான்.

@ வெற்றிவிழா

குஷ் ஹோம்லியா, அழகா இருப்பாங்க.

@ மாப்பிள்ளை

இதுல ஒரு பாட்டுல வர்ற ஊசியிலைக் காடிருக்க உச்சிமலை மேடிருக்க” என்ற வரிகளை நாங்கள் நண்பர்கள் போட்டு விவாதித்துக் கொண்டிருப்போம்!


நினைவுகளைக் கிளறியதற்கு நன்றி முரளி சாரே!

கிரி said...

//இதுதான்டா போலிஸ்//

இந்த படத்தை தாங்க நான் இன்னும் பார்க்கல..பார்க்கிற மாதிரியான சந்தர்ப்பம் அமையல..

மற்றபடி நீங்கள் கூறிய அனைத்து படமும் டக்கர் படம் தான். எனக்கு ராஜாதி ராஜாவில் மலையாள கரையோரம் பாட்டு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதே போல கரகாட்டகாரன் அனைத்து பாடல்களும்.

முரளி கண்ணன் நீங்க திரை துறையில் இருக்கிறீர்களா? திரை சம்பந்த்தப்பட்ட பதிவுகள் அதிகம் எழுதுகிறீர்களே அதனால் கேட்டேன்.

முரளிகண்ணன் said...

பரிசலாரே வாங்க வாங்க

@ராஜாதி ராஜா
கேசட்டில் இருக்கும் பாடலான 'உன் நெஞ்ச தொட்டு சொல்லு என் ராசா என் மேல் ஆசையில்லையா?' என்ற பாடல் தானே?

பகிர்தலுக்கு நன்றி

முரளிகண்ணன் said...

வாங்க கிரி

எனக்கு சினிமா,கிரிக்கெட்,அரசியல் மூன்றும் மிகப்பிடிக்கும்.
இப்போது கிரிக்கெட் ஆர்வம் குறைந்துவிட்டது.
அரசியல் பதிவுகள் எழுத விருப்பமில்லை.
எனவேதான் சினிமா பதிவுகள்.

rapp said...

//போங்கு தியேட்டர் என்றால் உங்களுக்கு ப்ரீயா?//

ஏங்க? எனக்குப் புரியலை.

முரளிகண்ணன் said...

போங்கு தியேட்டர் என்பதன் அர்த்தம் என்ன என்று தெரியவில்லை. ஒருவேளை உங்களுக்கு தெரிந்தவர்களின் தியேட்டரா? என்ற அர்த்தத்தில் கேட்டேன்.

RATHNESH said...

என் வாழ்வின் மிக முக்கிய ஆண்டு 1989. அங்கே இழுத்துச் சென்றதற்கு நன்றி.

//சைனீஸ் பட்லர் குஷ்பூவையும்//

எனக்கு பசுமையாக நினைவிருக்கிறது. அந்த ஆண்டில் நான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை என்கிர உறுதிப்பாடு எடுத்திருந்தேன். வருஷம் பதினாறு படத்தினைப் பார்த்து விட்டு என் அறை நண்பர்கள் "ஒரே ஒரு முறை அந்த குஷ்புவுக்காக அந்தப்படத்தைப் பார்த்து விட்டு உங்க விரதத்தைத் தொடருங்கள் ப்ளீஸ்" என்று சொக்கிப் போய் அனர்த்திக் கொண்டிருந்தார்கள். தமிழ்த் திரையுலகில் ஒரு புயல் மையம் கொண்டு விட்டது என்பது அப்போதே தெரிந்தது.

தங்கர்பச்சானும் மக்கள் டிவியும் எங்கே குஷ்பூவை அடுத்த முதல்வராக ஆக்கி இடுவார்களோ என்று பயந்தேன். நல்லவேளையாக அந்த அலை கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியின் புண்ணியத்தில் ஓய்ந்து விட்டது (என்று நினைக்கிறேன்).

Tech Shankar said...

Different Info. We are expecting like this. I enjoyed it..

Good Yaar "தமிழ் சினிமாவின் தங்க ஆண்டு - 1989

முரளிகண்ணன் said...

தமிழ்நெஞ்சம், மிக்க மகிழ்ச்சி, தொடருகிறேன்

முரளிகண்ணன் said...

ரத்னேஷ் பகிர்தலுக்கு நன்றிகள்

வெட்டிப்பயல் said...

இவ்வளவு படங்களும் அப்ப தான் வந்துச்சா... எல்லாம் படமும் பல தடவை பார்த்தாச்சு...

உதயம்னு ஒரு நாகர்ஜினா படம் வந்துச்சு (தெலுகுல ஷிவா). இந்த படம் கூட ஹிட் தான்... பாட்டெல்லம் செம ஹிட்...

பாட்டனி கிளாசிமுண்டு மெட்டினி ஷோவுமுண்டு ரெண்டுக்கும் போட்டி இப்ப தான்.

ஆடல்களும் பாடல்களும்...

இன்னும் நிறைய பாட்டு ஹிட்டு...

இது ராம் கோபால் வர்மாவோட முதல் படம் :)

முரளிகண்ணன் said...

\\உதயம்னு ஒரு நாகர்ஜினா படம் வந்துச்சு (தெலுகுல ஷிவா). இந்த படம் கூட ஹிட் தான்... பாட்டெல்லம் செம ஹிட்...
\\

பாலாஜி

உதயம் படத்தில் ரகுவரனும் கலக்கி இருப்பார். அமலாஉடன் நாகார்ஜூனா பாடும் இரவு பாடல் எனக்கு மிக பிடிக்கும்.

அருண்மொழிவர்மன் said...

மிக தாமதமான் பதிவு....

நான் நினைக்கிறேன் தர்மத்தின் தலைவன் கூட இதே ஆண்டு தான் வந்ததென்று

முரளிகண்ணன் said...

அருண்மொழி வர்மன் வருகைக்கு நன்றி.

\\மிக தாமதமான் பதிவு....

நான் நினைக்கிறேன் தர்மத்தின் தலைவன் கூட இதே ஆண்டு தான் வந்ததென்று\\

தாமதமான பதிவு என்றால்?

Unknown said...

ஆகா என்ன படங்கள் அத்தனையும்...
இதயத்தில் திருடாதே எனக்கு கொஞ்சம் தான் ஞாபகத்தில் உள்ளது...
இணையத்தில் எங்காவது உள்ளதா???
யாராவது தெரிஞ்சா சொல்லுங்களேன்....எனக்கு பாக்கணும் போல இருக்கு :(((

வருஷம் 16... எனக்கு ரொம்ப பிடிச்ச படம்....கார்த்திக்கின் துள்ளலான நடிப்பு+குஷ்பூ என்ற புயலின் அழகு என அட்டகாசம்...

மற்ற படங்களும் சூப்பர் தான்....

முரளிகண்ணன் உங்கள் பதிவு மிக நன்றாக உள்ளது....தொடர்ந்து எழுதுங்கள் :))))