September 29, 2008

அக்டோபர் 4 - சென்னை பதிவர் சந்திப்பு

அன்புடையீர்

வரும் அக்டோபர் திங்கள் நான்காம் நாள் மாலை ஆறு மணி அளவில் சென்னை மெரினா கடற்கரையில் பதிவர் சந்திப்பு நடத்த உத்தேசித்துள்ளோம். வழக்கமாக பதிவர் சந்திப்புக்கு வருபவர்களையும், இதுவரை கலந்துகொள்ளாமல் வெளியில் இருந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் பழைய/புதிய பதிவர்களையும் வந்து சிறப்பிக்குமாறு இருகரம் கூப்பி அழைக்கிறோம்.

சந்திப்புக்கு சிறப்பு விருந்தினராக ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பொட்டிக்கடையார் கலந்து கொள்கிறார்.

இவர் 2005 ஆம் ஆண்டு பதிவுலகில் நுழைந்து, 2006- 2007 ஆம் ஆண்டுகளில் மிக துடிப்புடன் விளங்கினார். அரசியல், சமுதாய பிரச்சினைகளை ஆராய்ந்து பல கட்டுரைகள் எழுதியுள்ளார். பிரபல கும்மி பதிவராகவும் திகழ்ந்தவர். எதிர் கவிதைகள் இவரது சிறப்பு. சில்வியா குண்டலகேசிக்கு எதிர்வினையாக கேத்தரின் பழனியம்மாளை ஆதரித்தவர். இவர் சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரரும் ஆவார். ஆஸ்திரேலியாவில் மிட்சேல் ஜான்சன் ஆடும் உள்ளூர் அணியில் இடம்பெற்றவர்.

சந்திப்புக்கு பாலபாரதி,லக்கிலுக்,நர்சிம்,அதிஷா ஆகியோர் வருவதாக உறுதியளித்துள்ளார்கள்.

மீண்டும் ஒருமுறை அனைவரையும் சந்திப்புக்கு சென்னை பதிவர்கள் சார்பாக அழைக்கிறேன்

50 comments:

Athisha said...

பதிவையே ரிப்பீட்டுகிறேன்

அனைத்து சென்னை பதிவர்களும் கலந்துக்கோங்கப்பா

இல்லாங்காட்டி உங்க பேச்சி கா தான்

Ŝ₤Ω..™ said...

மிக்க மகிழ்ச்சி.. இது போல் ஒரு சந்திப்பு சென்னையில் நடக்காதா என்று எண்ணினேன்.. கண்டிப்பாக கலந்துக்கொள்கிறேன்..

இது குறித்த பணி எதும் இருப்பின், அழையுங்கள்..
என் மின்னஞ்சல்:asksen.ashok@gmail.com

புதுகை.அப்துல்லா said...

என்னண்ணே நா ஊருல இல்லாத நாளா பார்த்து கூப்புடுறீங்க?

பரிசல்காரன் said...

இந்தப் பதிவுக்கு மீ த ஃபர்ஸ்ட்டாக நான் இருக்கவேண்டுமென என்னையே வாழ்த்திக்கொள்கிறேன். (தலையெழுத்துடா சாமீ!)

Sen said...

also plz let me knw hw to contact U people..

பரிசல்காரன் said...

சந்திப்புக்கு வாழ்த்துக்கள். வரமுடியாததற்கு வருத்தங்கள். (தப்பீச்சீங்க!)

பரிசல்காரன் said...

//வரும் அக்டோபர் திங்கள் நான்காம் நாள் மாலை ஆறு மணி அளவில் சென்னை மெரினா கடற்கரையில் பதிவர் சந்திப்பு நடத்த உத்தேசித்துள்ளோம்.//

என்ன, செந்தமிழ்ல எழுதினா வரிவிலக்கு எதுனா தர்றாங்களா? சாரே, நீங்க எழுதினதுல அக்டோபர் 4 என்ன கிழமைன்னே போடல. அதுனால அதுல வர்ற திங்கள், மாதம்-ங்கற அர்த்தத்தை மீறி திங்கட்கிழமைங்கற அர்த்தம் தொனிக்குது. கவனிங்க.

(ஏய்... யாருப்பா அங்க. நம்ம பரிசலுக்கு ஒரு டாக்டர் பட்டம் கொடுங்கப்பா)

பரிசல்காரன் said...

எப்பப்பார்த்தாலும் இருட்டுலயே பதிவர் சந்திப்பு நடத்துற ரகசியத்தை இந்த முறை வெளியிடவும்.

பரிசல்காரன் said...

என்ன பண்றீங்க சார்? இன்னும் கமெண்டை ரிலீஸ் பண்ணாம? அதான் உங்க தங்கமணியை ஊர்ல விட்டாச்சுல்ல? அப்புறம் கம்ப்யூட்டர் முன்னாடி உக்காராம என்ன வேலை?

பரிசல்காரன் said...

அறிவிக்கப்பட்ட இந்த பதிவர் சந்திப்பின்போது, அறிவிக்கப்படாமல் நேற்று சென்னையில் ஒரு பிரபல புள்ளியின் வீட்டில் நடந்த பதிவர் சந்திப்பைப் பற்றியும் விவாதிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

பரிசல்காரன் said...

'யாருமில்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துற?

வா, அந்தப்பக்கம் ஒருத்தன் சிக்கீருக்கான். அங்கெ போலாம்.'

ஓக்கே சாரே.. வர்ட்டாஆஆஆஆஅ...

அத்திரி said...

நைட் ஷிப்டில் இருப்பதால் முடிந்தால் வருகிறேன்.

புருனோ Bruno said...

உள்ளேன் ஐயா

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி அதிஷா, சென், அப்துல்லா,பரிசல்,புருனோ,அத்திரி

முரளிகண்ணன் said...

பரிசலாரே இணைய இணைப்பு இல்லை எனவே தான் கமெண்ட் ரிலீஸ் பண்ண முடியவில்லை. மன்னிக்கவும். அடிக்கடி வந்து போங்க.

முரளிகண்ணன் said...

சென் ஆர்வத்திற்க்கு நன்றிகள், அப்துல்லா அடுத்தமுறை பார்த்துடுவோம்

அத்திரி முயற்ச்சி செய்து வாருங்கள்

அத்திரி said...

அக்டோபர் 4ஆம் தேதி சனிக்கிழமை. சரிதானே

மோகன் கந்தசாமி said...

பதிவர் சந்திப்பு எவ்வளவு நேரம் நடைபெறும் என்று தெரிவிக்கவும். ஓரிரு மணிநேரம் நடைபெறுமா? 1944 மணிநேரம் நடைபெற்றால் கடைசி இரண்டு மணிநேரம் நான் கலந்து கொள்கிறேன். :-)))

மோகன் கந்தசாமி said...

பதிவர் சந்திப்பிற்கு வாழ்த்துக்கள்!

narsim said...

பரிசலார் வரவில்லையா..?? சனிநீர் ஆடுவோம்னு பார்த்தேன் பரிசலாரே..

நர்சிம்

குப்பன்.யாஹூ said...

4 ஆம் தேதி நேரம் சொல்லவும்,. நானும் கலந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் தாமதமாக தான் வலை பதிவு உலகத்தில் நுழைந்தேன். அதனால் ராகிங் பண்ண மாடீர்களே.

வழ்க்கமாக வெளிநாட்டு வாழ தமிழ்ர்கள் தான் உணவு SPONSOR செய்வார்கள், (IN YAHOO CHATTERS, PALTALK CHATTERS MEET) எனவே போட்டிகடையார் தான் SPONSOR செய்வார் என நம்புகிறேன்.

முரளிகண்ணன் said...

மோகன் கந்தசாமி சென்னை வரும்போது சொல்லுங்க, அசத்தீருவோம்

முரளிகண்ணன் said...

\\பரிசலார் வரவில்லையா..?? சனிநீர் ஆடுவோம்னு பார்த்தேன் பரிசலாரே..

நர்சிம்\\

பரிசல் இம்முறை தப்பித்துவிட்டார். எங்கே போய் விடுவார்?

முரளிகண்ணன் said...

குப்பன் அவர்களே வருக வருக. உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றி விடுவோம்

Anonymous said...

நொம்ப தப்புய்யா
பொட்டிக்கடையார் வராருன்னதும் வரிஞ்சு கட்டிக்கிட்டு இன்னொரு அக்டோபர் புரட்சியை மறந்துஇந்தக் கூட்டத்தைக் கூட்டும் பாலா,லக்கிலுக் உள்ளிட்டவர்க்ளைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். வந்து வச்சுக்குறேன்யா உங்களை

எப்படியோ நல்லா இருங்கடே!

பொய்யன் said...

nan varlama..........

நிழல் said...

நானும் வரலாமா ?

லக்கிலுக் said...

//சந்திப்புக்கு பாலபாரதி,லக்கிலுக்,நர்சிம்,அதிஷா ஆகியோர் வருவதாக உறுதியளித்துள்ளார்கள்.//

லக்கிலுக்கும் நர்சிம்முக்கும் இடையில் இருக்கும் கமாவை எடுத்துவிடுங்கள். uneasy ஆக இருக்கிறது :-))))

முரளிகண்ணன் said...

நிழல், அவசியம் வாருங்கள். உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிரோம்

முரளிகண்ணன் said...

பொய்யன், அவசியம் வாருங்கள். உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிரோம். உங்கள் மிடில் கிளாஸ் பதிவுகளைப் பற்றி சென்ற சந்திப்பின் போதே பேசினோம்

முரளிகண்ணன் said...

அண்ணாச்சி,
மிரட்டாதீங்க. பயமா இருக்கு.
சின்ன புள்ளைங்க ஒரு ஆசையில செய்யுரோம். விட்டுருங்க.

முரளிகண்ணன் said...

தோழரே,

\\லக்கிலுக்கும் நர்சிம்முக்கும் இடையில் இருக்கும் கமாவை எடுத்துவிடுங்கள். uneasy ஆக இருக்கிறது \\


இதில் உள்ள நுண்ணரசியல் என்ன?

அக்னி பார்வை said...

என்னை மாதிரி புது பதிவர்களும் கலந்துக்கொ(ல்ல)ள்ள அனுமதி உண்டா ???

உண்டென்றால் எந்த நேரம் எங்கு வரவேண்டும் என்று தெரியப்படுத்தவும்.

thiruvinod@yahoo.com,
thiruvinod4u@gmail.com

நன்றி

முரளிகண்ணன் said...

வாருங்கள் அக்னி

புது பதிவர்களை சந்தித்து அளாவளாவவே இம்மாதிரி சந்திப்புகளை நடத்துகிரோம். அவசியம் வாருங்கள். இனிமேல் பதிவு எழுத விருப்பம் உள்ளவர்கள், பதிவுகளை படிப்பவர்கள் யாவரும் வரலாம். இதற்கு அனுமதி என்ற பேச்சே இல்லை. வருபவர்கள் அனைவரும் கோ ஆர்டினேட்டர்களே. பதிவிட்டிருப்பதால் நாங்கள் நடத்துகிரோம் என்று இல்லை.

அக்டோபடர் 4 ம் தேதி, சனிக்கிழமை, மாலை 6 மணி, மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே.

அக்னி பார்வை said...

நன்றி,
அதிஷவும் என்னை தொடர்பு கொண்டார் நிச்சயம் கலந்துக்கொல்வேன்..

குப்பன்.யாஹூ said...

பதிவர் சந்திப்பில் என்ன பேச போகிறோம்.

ஏன்என்றால் இதற்க்கு முன்பு 5 to 6 முறை Yahoo Tamilnadu1 அறை சாட்டர்கள் சந்திப்பில் பேசுவதற்கு ஒன்றுமே இருக்காது. 2 மணி நேரம் பேசுவோம் என்று 1 மாதமாக விளம்பரம் செய்து இறுதியில், நேரில் சந்திக்கும் பொது 10 நிமிடங்களுக்கு மேலாக பேசுவதற்கு விஷயம் இருக்காது.

அதுவும் ஆண்பாளர்கள் (males) மட்டும் மீட்டினால் செம அறுவையாக இருக்கும் அந்த சந்திப்புகள்.

பெண் சாட்டர்கலாவது உடை, வண்ணம், அணிகலன்கள் பற்றி பேசி நேரத்தை தள்ளுவார்கள்.


இருந்தாலும் இந்த பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துகிறேன்
.

குப்பன்.யாஹூ said...

I assume that there will be no drinks (alkochol) at this meet.

If so please inform, I will avoid this meet.

Kumky said...

திரு.எம் கே .,சந்திப்பு எவ்வளவு நேரம்., எது சம்மந்தமாக..என்றெல்லாம் குறிப்பிட்டால் வர ஏதுவாக இருக்கும்.

வெண்பூ said...

//
பதிவர் சந்திப்பில் என்ன பேச போகிறோம்.
//

சந்திப்பு மிகவும் இன்ஃபார்மலாக இருக்கும். யாரும் எதைப்பற்றியும் பேசலாம். சொல்லப்போனால் நம்முடன் படித்த கல்லூரி நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் என்ன செய்வோமோ அப்படித்தான் இருக்கும்.

//
நேரில் சந்திக்கும் பொது 10 நிமிடங்களுக்கு மேலாக பேசுவதற்கு விஷயம் இருக்காது
//

கவலையே படாதீர்கள். குறைந்தது 2 மணிநேரமாவது வாய் வலிக்க பேசியபின்னும் பேசுவதற்கு நிறைய மேட்டர் இருக்கும். அதனால் கண்டிப்பாக வாருங்கள். புதிய அனுபவமாக இருக்கும்.

Thamira said...

அய்யய்யோ நெறய கூட்டம் வரும்போல இருக்கே, கண்டிப்பா வரணுமா? நமக்கு கூட்டம்னா அலர்ஜி. இன்னிக்குதான் ரமாவோட சரவணாஸ்டோர்ஸ் கூட்டத்தில நசுங்கிட்டு வர்றேன்.. (சும்மா, லுலுலாயிக்கு.. வந்திடுவேன். ஆனா போன தடவை மாதிரி தமிழக அரசியல், பின்னர் தேசிய அரசியல், பின்னர் உலக அரசியல்னு ரெண்டு மணி நேரத்துக்கு போட்டு தாக்கிறகூடாது)

ISR Selvakumar said...

நிறைவான சந்திப்பிற்கு வாழ்த்துக்கள். நிச்சயம் வருவதற்கு முயற்சிக்கிறேன்.

tamilraja said...

yaarai thotarpu kolluvathu?

yethenum number ullathaa?

லக்கிலுக் said...

//yethenum number ullathaa?//

அதிஷா @ 9941611993
பக்கிலுக் @ 9841354308

ers said...

புதிய பதிவர்களுக்கு கடைசி சீட்டா?

குட்டிபிசாசு said...

mannikkavum, naan innaikku thaan oorukku poren. aduththa vaaram santhippu vachi irunthaa kandippa vanthu iruppen.

நிழல் said...

உடல் நலம் சரி இல்லாமையால் வர இயலவில்லை, மன்னிக்கவும்,
அடுத்த பதிவர் சந்திப்பில் கண்டிப்பாக கலந்து கொள்வேன்

Dr.Rudhran said...

please let me know about the next meet...dr.rudhran@gmail.com

முரளிகண்ணன் said...

\\please let me know about the next meet...dr.rudhran@gmail.com\\

தங்கள் வருகைக்கு நன்றி. அவசியம் தெரியப்படுத்துகிறோம்.

நசரேயன் said...

பழைய படம் இன்னும் ஓடுதா?
ரெம்ப சந்தோசம்

முரளிகண்ணன் said...

\\பழைய படம் இன்னும் ஓடுதா?
ரெம்ப சந்தோசம்\\

what?