September 24, 2008

தமிழ்சினிமாவில் காமெடி நடிகைகள் குறைவு-ஏன்?

தமிழில் குறிப்பிடத்தக்க காமெடி நடிகைகள் என்றால்

டி ஏ மதுரம்
டி பி முத்துலட்சுமி
மனோரமா
ஈ வி சரோஜா
சச்சு
காந்திமதி
ஊர்வசி
கோவை சரளா
கல்பனா
ஆர்த்தி

முதலானோரை சொல்லலாம். இதுதவிர கனகா (விரலுக்கேத்த வீக்கம்), சுவாதி (அசத்தல்) போன்ற நாயகிகள் மார்க்கட் போனபின் காமெடி செய்தனர்.

ஷகிலா,ஷீத்தல் – ஜல்லிக்கட்டு காளை
ஜோதிமீனா - பரம்பரை
பாபிலோனா - அசத்தல்
போன்ற கவர்ச்சி நடிகைகள் சில படங்களில் காமெடி செய்தனர்.

ஆனால் காமெடி நடிகர்களுடன் ஒப்பிட்டால் இவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஏன் பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவா?. அதில்லை காரணம்.

ஸ்கிரிப்ட் ரைட்டர்

காமெடிக்கு வலுவான ஸ்கிரிப்ட் அவசியம். சில இயக்குநர்களே அதில் மன்னர்கள். இல்லையெனில் ஸ்கிரிப்ட் ரைட்டர் துணை தேவை. எடுத்துக்காட்டாக

கலைவானர் – தானே எழுதும் ஆற்றல் கொண்டவர்
நாகேஷ் – ஸ்ரீதர்,பாலசந்தர் போன்றோரின் படங்களில் மின்னிய
அளவுக்கு மற்ற படங்களை சொல்ல முடியாது.

கவுண்ட மணி – ராஜகோபால்

விவேக் – பிரசன்னகுமார் (தற்போது மறைந்து விட்டார்),
செல்முருகன்

வடிவேலு – சிங்கமுத்து, அல்வா வாசு, போண்டா மணி,
லஷ்மண் போன்றோருடன் குழு விவாதம்


மேற்கூறிய அனைவரும் சுயமாக காமெடி செய்யக்கூடியவர்கள் என்றாலும் ரைட்டர் துணை தேவைப்படுகிறது. பெண்கள் இவ்வாறு இயங்குவதில் நடைமுறை சிக்கல்கள் அதிகம்.


குழுவாக இயங்குதல்

தமிழ் சினிமாவில் பெண்களுக்கு நாயகி/குணசித்திர வேடம், பிண்ணனி பாடுதல்/பேசுதல், நடன இயக்கம் ஒரளவு எளிது. மற்ற துறைகள் குழுவாக இயங்குபவை. நேரம் காலம் கிடையாது. மற்றவர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். எ.கா. டைரக்ஷன்,ஒளிப்பதிவு, கலை. இத்துறைகளில் பல துறையினரின்
ஒத்துழைப்பு தேவைப்படும். காமெடியும் அது போலத்தான். பிற நடிகர்களுடன் ரிகர்சல், விவாதம் தேவை. இல்லையெனில் சொதப்பிவிடும். பலரால் இதுபோல் செய்ய முடிவதில்லை. இயக்குநர் காமெடியன் கெமிஸ்டரி கட்டாயம் தேவை.

வடிவேல், சுந்தர் சி – வின்னர், இரண்டு
வடிவேல், சுராஜ் - தலைநகரம், மருதமலை

இவை மற்ற வடிவேல் படங்களை விட பெரிதும் பேசப்பட்டவை. ஆனால் நடிகைகளுடன் அத்தகைய ரேப்போ கிரியேட் செய்வது கடினம்.

மொழி

காமெடிக்கு தமிழ் நன்கு தெரிய வேண்டும். அர்த்தம் புரிந்து பேச வேண்டும். மற்றவர்கள் பேசுவது புரிந்து ரியாக்ட் செய்ய வேண்டும். இல்லையெனில் டைமிங் அமையாது மற்றவர்களை வைத்து வசனம் டப் செய்ய இயலாது. இது மற்ற மாநிலத்தவர்களை தடுத்து விடுகிறது. (விதிவிலக்கு ஊர்வசி,கல்பனா ஆனால் தமிழ் நன்கு கைவரப்பெற்ற பின்னரே இவர்கள் காமெடி செய்ய தொடங்கினர்)

சமுதாய மதிப்பு

பெண்கள் கதாநாயகியாக இருப்பதையே அவர்கள் மனம் விரும்பும். சமுதாயத்தில் ஹீரோவுக்கும் காமெடியனுக்கும் உள்ள மரியாதை வேறுபாடு அனைவருக்கும் தெரியும். காமெடி சீனுக்காக அவலட்சணமாக தோன்ற வேண்டும். இரட்டை அர்த்த வசனம் பேச வேண்டும் போன்ற நிர்ப்பந்தங்கள் உள்ளன. இது பெண்களை கூச்சப்படுத்தும் ஒன்று. கவர்ச்சி உடை அணிந்து ஆட தயாராக உள்ள பெண்கள் கூட நாலு பேருக்கு முன்னால் இரட்டை அர்த்தத்தில் பேச தயங்குவர். குறிப்பிட்ட அனுபவத்துக்கு பின்னரே காமெடி கைகூடும். இதற்கு கல்யாண பிரச்சினை தடைக்கல்லாக அமைகிறது. தன் மனைவி காமெடியாக நடிக்க போவதை எத்தனை ஆண்கள் விரும்புவார்கள்?

டி ஏ மதுரம், ஈ வி சரோஜா – கணவர் காமெடியன்கள்
சச்சு, கோவை சரளா - திருமணம் செய்யவில்லை


சம்பளம்

கதாநாயகி/கவர்ச்சி நாயகிகளின் சம்பளம் நகைச்சுவை நாயகிகளை விட அதிகம். நயன்தாரா 1 கோடி. ஆர்த்தி - ?.
இவர்கள் காலம் முழுவதும் சம்பாதிப்பதை அவர்கள் இரண்டாண்டில் எடுத்து விடுவார்கள்.

இதுபோன்ற காரணங்களால்தான் கடந்த 40 ஆண்டுகளில் 4 நல்ல காமெடி நடிகைகள் கூட வரவில்லை. எஸ் வி சேகர், கிரேஸி மோகன் நாடக குழுவில் கூட சிலரை வைத்தே ஒப்பேற்றினர். ஆனால் இப்போது டிவி நகைச்சுவை நிகழ்ச்சிகளால் உமா ரியாஸ் போன்றோரும்.நகைச்சுவை தொடர்கள் மற்றும் புரிதல் காரணமாக தேவதர்ஷினி (பார்த்திபன் கனவு), தீபா வெங்கட் (ஜெயம் கொண்டான்) போன்றோரும் பொரிய திரைக்கு வருகிறார்கள். இது தொடர வேண்டும். சன்னை போலவே கலைஞரும் காமெடி சானல் துவக்கவிருப்பதால் இனி இது அதிகமாகும் என்றே தோன்றுகிறது.

30 comments:

புருனோ Bruno said...

"தமிழ்சினிமாவில் காமெடி நடிகைகள் குறைவு-ஏன்?

தமிழ்சினிமாவில் கவர்ச்சி ஆட்டம் போட நடிகர்கள் குறைவு ஏன் ?

இரண்டிற்கும் பொதுவான பதில்கள் சில உள்ளன :)

முரளிகண்ணன் said...

\\இரண்டிற்கும் பொதுவான பதில்கள் சில உள்ளன \\

டாக்டர் சொல்லுங்க.

நந்தா said...

முரளி கண்ணன் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே போகிறீர்கள். கூர்மையான அவதானிப்புகள் மற்றும் அலசல்கள். கலக்குங்கள்.

ராமராஜன் மற்றும் பிறரின் கிராமப் படங்களுக்கிடையேயான நீண்ட விமர்சனப் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

வெட்டிப்பயல் said...

சுந்தர்.சி க்கு கவுண்டரும் நல்லா ஒத்து வரும். உள்ளத்தை அள்ளி தா, மேட்டுக்குடி எல்லாம் கவுண்டர் பட்டையை கிளப்பின படங்கள். முறை மாமன் (கவுண்டர், ஜெயராம்) கூட சுந்தர்.சி தான்னு நினைக்கிறேன்.

அப்பறம் வடிவேல் காம்பினேஷன்ல கிரியை மிஸ் பண்ணிட்டீங்க...

நாகேஷை நீங்க சொன்ன மாதிரி பாலசந்தரும், ஸ்ரீதரும் தான் அருமையா பயன்படுத்தினாங்க. ஆனா காமெடில பார்த்தா பாலச்சந்திரை விட ஸ்ரீதர் தான் நல்லா பயன்படுத்தினார். KB அவரை நல்ல குண சித்திர நடிகரா பயன்படுத்தினார் :)

புதுகை.அப்துல்லா said...

என்ன டாக்டர் கொஸ்டின மட்டும் போட்டுட்டு போய்டிங்க?

முரளிகண்ணன் said...

\\ராமராஜன் மற்றும் பிறரின் கிராமப் படங்களுக்கிடையேயான நீண்ட விமர்சனப் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
\\

அன்பு நந்தா, சில மாதங்களுக்கு முன்பு சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.

ராமராஐன் படங்களின் உளவியல் - என்ற தலைப்பில்.

விரிவாக எழுத விழைகிறேன்.

முரளிகண்ணன் said...

\\KB அவரை நல்ல குண சித்திர நடிகரா பயன்படுத்தினார் \\

ஆமாம் பாலாஜி. எதிர்நீச்சலை யாரால் மறக்க முடியும்?

முறைமாமன் - சுந்தர் சி யின் முதல் படம். சமீபகால எ.கா வுக்காக வடிவேலை எடுத்தக் கொண்டேன். கிரி யை ஞாபகப்படுத்தியதற்க்கு நன்றி

முரளிகண்ணன் said...

வாங்க புதுகை அப்துல்லா

\\என்ன டாக்டர் கொஸ்டின மட்டும் போட்டுட்டு போய்டிங்க?

\\
டாக்டர தனிப்பதிவா போடச்சொல்லி கேட்டுக்கிறோம்.

கோவி.கண்ணன் said...

நல்ல அலசல்.

நடிகைகளை திரைப்படத்தில் கவர்ச்சி ஊறுகாயாகத்தானே பயன்படுத்துகிறார்கள். திரைப்படத்துறை ஆண்களின் ஆளுமையில் இருக்கிறது.

கோவி.கண்ணன் said...

சினிமா தொடர்புடைய பலவற்றையும் எழுதுகிறீர்கள்.

பதிவுலக பேசும் படம் - உங்கள் பதிவு !

:)

சரவணகுமரன் said...

நல்ல பதிவு....

//கனகா (விரலுக்கேத்த வீக்கம்), சுவாதி (அசத்தல்) போன்ற நாயகிகள் மார்க்கட் போனபின் காமெடி செய்தனர்//

நிரோஷாவையும் நளினியையும் இதில் சேர்த்து கொள்ளலாம்.

சரவணகுமரன் said...

//ஆனால் காமெடி நடிகர்களுடன் ஒப்பிட்டால் இவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஏன் பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவா?. //

இங்கே மற்றவர்களை கிண்டல் செய்வதையும் தங்களை தாங்களே கிண்டல் செய்வதையுமே நாம் காமெடியாக பெரிதும் காண்கிறோம். பெரும்பாலான பெண்கள் தங்களை தாங்களோ, மற்றவர்களோ கிண்டல் செய்தால் ஒத்து கொள்ளமாட்டார்கள் என்பதும் ஒரு காரணமோ?

சரவணகுமரன் said...

வின்னர் காமெடி வசனம் எழுதியது சுந்தர் சியின் உதவி இயக்குனரான பூபதி பாண்டியன் (தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைகோட்டை) என்று எங்கோ படித்த ஞாபகம்.

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி கோவிஜி

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி சரவண குமரன், உங்கள் தகவலுக்கும் கருத்துக்கும் நன்றி.

\\வின்னர் காமெடி வசனம் எழுதியது சுந்தர் சியின் உதவி இயக்குனரான பூபதி பாண்டியன் \\

பூபதி பாண்டியன் எழுதியதுதான் அது. விஜய் டிவியின் கலக்கப்போவது யாரில் இத்தகவலை அவர் கூறினார்

narsim said...

முரளி.. கலக்கல்..

வெளியூர் சென்றதால் தாமதம்.. மன்னிக்கவும்

நர்சிம்

பாரதி தம்பி said...

பிரமாதம்.. என்னாலதான் எழுத முடியலை. நேரம் இல்லை. நீங்களாவது தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

முரளிகண்ணன் said...

நர்சிம், ஆழியூரான் வருகைக்கு நன்றி.

koothanalluran said...

பாமா விஜயத்தில் சவுகார் ஜானகி அடித்த கூத்தை மறந்து விட்டீர்களா

பூனம் கி ராத் என்றால் அர்த்தராத்திரியில் பூனை வரும் என்ற ஜோக்கை மறக்க முடியுமா ?

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி கூத்தநல்லூரார்

rapp said...

முரளிக்கண்ணன் சார், ஒரு சின்ன திருத்தம். ஈ.வி.சரோஜா டைரெக்டர் தயாரிப்பாளர் ராமண்ணாவின் மனைவி. அவங்களும் சில படங்களில் காமடி செய்திருக்காங்க(எ.கா:குலேபகாவலி). தங்கவேலு அவர்களின் மனைவி சரோஜா தங்கவேலு(இவங்களை சமீப காலம் வரை பல திமுக கூட்டங்களில் பார்த்திருக்கலாம்)
ஐம்பதுகளில் அங்கமுத்து போன்றவர்கள் மிகப் பிரபலமாக இருந்தார்கள் என நினைக்கிறேன்.
அறுபதுகளில் அம்முக்குட்டி, ஜி.சகுந்தலா இவங்கெல்லாம் ஓரளவுக்கு பிரபலமாக இருந்தார்கள்.

அதேப்போல ராகினி(பத்மினியின் சகோதரி) அவர்களும் கிட்டத்தட்ட பெரும்பான்மையான தமிழ்ப் படங்களில் நகைச்சுவை வேடங்களிலேயே நடித்தார்.
இன்னும் பலர் எழுபதுகளின் ஆரம்பம் வரைக்கும் இருந்தார்கள்.

கதாநாயகிகளை பொறுத்தவரை தொன்னூறுகள் வரைக்கும் முக்காவாசிப்பேர் கொடுத்த காமடி ரோலை நன்றாக செய்தார்கள் என நினைக்கறேன்.

அதேப்போல நாகேஷ் அவர்களுக்கும் சரி, கௌண்டமணி அவர்களுக்கும் சரி மறைந்த திரு வீரப்பன் அவர்கள் பல படங்களில் காமடி ட்ராக் எழுதியுள்ளார்.

நசரேயன் said...

நல்ல அலசல்

முரளிகண்ணன் said...

ராப் லட்டு லட்டான தகவல்களைத் தருகிறீர்கள். திருத்திக்கொள்கிறேன். இணைத்துக்கொள்கிறேன்.

உங்கள் பின்னூட்டங்கள் என் பதிவிற்கு ஊட்டச்சத்துக்கள்

முரளிகண்ணன் said...

நசரேயன் தங்கள் வருகைக்கு நன்றி

RATHNESH said...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள். உங்கள் பட்டியலில் உள்ள நடிகைகளிலும் நிஜமாகவே சிரிக்க வைத்தவர்கள் எத்தனை பேர் என்றும் பார்க்க வேண்டி இருக்கிறது. நகைச்சுவைக் காட்சிகள் பெரும்பாலும் ஆணை மையப்படுத்தியோ ஆணின் ஆளுமையிலோ தான் இருக்கின்றன என்று தோன்றுகிறது. அந்தக் காட்சிகளில் துணை இருக்கும் பெண் நகைச்சுவை நடிகை என்று முத்திரை இடப்படுகிறார்.

பெண்ணை மையப்படுத்தி அதாவது பெண்ணின் மூலமாக நகைச்சுவைக் காட்சிகள் அமைக்கப்பட்ட உதாரணங்கள் மிக மிகக் குறைவு என்றே தோன்றுகிறது. நகைச்சுவைக்கும் பெண்களுக்கும் ரொம்ப தூரம் போல் என்கிற பிம்பம் இருக்கிறது. சினிமாவில் என்று இல்லை, மேடைப் பேச்சுகளில் கூடப் பாருங்கள்;பட்டிமன்றங்களில் பாருங்கள், எங்குமே அவர்கள் சீரியஸ் தான்.

முரளிகண்ணன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரத்னேஷ்

CA Venkatesh Krishnan said...

எனக்கு அவ்வாறு தோன்ற வில்லை முரளி கண்ணன்.

இந்த எண்ணிக்கையும் ஆண் நகைச்சுவை நடிகர்களின் எண்ணிக்கையும் ஒரு விதத்தில் சமன் பாட்டில் தான் வருகின்றன.

பெரும்பாலான பெண் நகைச்சுவை நடிகைகள் வெற்றி பெற்றவர்களே. ஆண் நகைச்சுவையாளர்கள் அவ்வாறு இல்லை என்பது என் கருத்து.

கார்க்கிபவா said...

என்னக்கென்னவோ பொதுவாகவே பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்றி தோண்றுகிறது.. ராப் போன்றவர்கள் விதிவிலக்கு.. நல்ல பதிவு..

முரளிகண்ணன் said...

இளைய பல்லவன் வருகைக்கு நன்றி.

காமெடி நடிகர்கள் எண்ணிக்கை மிக அதிகம். வெற்றி அடைந்தவர்களே 20க்கும் மேல் சொல்லலாம். ஆனால் பெண்களில்? வந்தததே 20க்குள் தான்.
அவர்களின் காட்சிகளும் மிககுறைவு

முரளிகண்ணன் said...

\\ராப் போன்றவர்கள் விதிவிலக்கு..\\

ஆமாம் கார்க்கி, அவர் காட்சி ஊடகத்துக்கு சென்றால் பெரும் பெயர் பெறுவார்