September 08, 2008

விஜய், ஜெயம் ரவி இது நியாயமா?

முன்னெல்லாம் கொறஞ்சது வருஷத்துக்கு பத்து தெலுங்கு டப்பிங் படம் வரும். அதப்பார்த்துட்டு வெளிய வந்தமுன்னா என்னடா தமிழ்நாடு இவ்வளவு அமைதியா இருக்கேன்னு தோணும்.

சோபன்பாபு,கிருஷ்ணா,விட்டலாச்சார்யா இவங்கள்ளாம் ஓஞ்ச பின்னாடி சிரஞ்சீவியும்,விஜயசாந்தியும் வந்தாங்க. இதுதாண்டா போலிஸ், இதயத்தை திருடாதேக்கு அப்பறம் கொஞ்சம் ராஜசேகர் படமும், நாகார்ஜூனா படமும் வந்துச்சு.

இதையெல்லாம் தூக்கி சாப்பிட்டது நம்ம ரோஜா. செம்பருத்தில நம்ம ஆளூக பூராம் மட்டையாகவும், சுதாருச்சுக்கிட்ட நம்ம டப்பிங் ஆளூக வரிசையா ரோஜா படத்த இறக்கிட்டாங்க. அதனால பாலகிருஷ்ணா,வினோத்குமார் மாதிரி ஆளூக படத்தையும் பார்க்க வேண்டியதாப்போச்சு.

இப்பல்லாம் பாருங்க டப்பிங் படத்தயே காணோம்.

ஜெயிக்கற படம்தான் டப்பாகும். அங்க ஜெயிக்கிறது முக்கியமா மூணு டைப்பு.

பக்கா நேட்டிவிட்டி படம். அத இங்க டப் பண்ணா ஆப்பரேட்டர் வேலய விட்டுட்டு ஓடிப்போயிருவாரு

அப்புறம் இங்கன இருந்து சுட்டு எடுக்கிறது. கருவாடு மீனாகுமா? கறந்த பால் மடிபுகுமான்னு? காளிமுத்து டயலாக்தான் ஞாபகம் வருது.

அடுத்தது அவங்களே தெரியாம எடுத்துற்ற நல்ல படம். இத நம்ம விஜய் கோஷ்டி அப்படியே அமுக்கீருது. இதுக்காக தனி உளவுத்துறையையே நம்ம டாக்டர் வச்சிருக்காரு. இப்ப ரவியும் அதுக்கு போட்டியா வந்துட்டாரு.

இனிமே தெலுங்கு படத்த ஜெமினியிலயும், ஈ லயும் தான் பார்க்கணும் போல. அத போட்டாலே வீட்டுல கொன்னுற்றாங்க. யாராச்சும் திருப்பதி போனா சொல்லுங்க. உங்க கூடவே வர்றேன். நீங்க லட்டு வாங்க நிக்கும் போது நான் ரெண்டு படம் பார்த்துட்டு வந்துர்றேன். எனக்கு ரெண்டு லட்டு குடுத்தீங்கன்னா அடில இருந்து தப்பிச்சுக்கிருவேன்.

10 comments:

சரவணகுமரன் said...

//ஆப்பரேட்டர் வேலய விட்டுட்டு ஓடிப்போயிருவாரு //

:-))

முரளிகண்ணன் said...

சரவண குமரன், ரசித்ததற்கு நன்றிகள்

கார்க்கி said...

தல,ஏதோ விஜயும் ரவியும் மட்டும்தான் இந்த வேலைய செய்வது போல் சொல்வது நல்லாயில்ல..குசெலன்,வசூல்ராஜ,கீரிடமனு யாருதான் செய்யல? பேர் தெரியாத படங்கள காப்பியடிக்கிற மனிரத்னம் கமல் எல்லாம் பெரிய ஆளுங்க.. சொல்லிட்டு செய்யுற இவங்க மோசமானாவங்களா?

மண்ணிச்சுக்கோங்க ...என் கருத்து.. அவ்ளோதான்.....

முரளிகண்ணன் said...

கார்க்கி, இதில் நான் கோபப்பட ஏதுமில்லை.
டப்பிங் படங்கள் முன் போல் வராததன் காரனங்களை பார்க்கும் பதிவே இது. இதில் இன்னொரு செய்தியும் அடங்கியுள்ளது. இப்போதுள்ள புது தலைமுறை தெலுங்கு நடிகர்கள் (மகேஷ் பாபு, பவன் கல்யான்,ரவி தேஜா) நமக்கு தெரியாமல் போக இவர்கள் ஒரு காரணம் என்பதே அது.
குறை எல்லாம் சொல்லவில்லை.

rapp said...

எங்கப்பா நண்பர் ஒருத்தர் கவிஞர் சிதம்பரநாதன்னு (ஏரிக்கரை பூங்காற்றே)பேர். தன் ஆசிரியர் தொழிலையும், சினிமாவில் மற்ற கவிஞர்களின் போட்டியை ஓங்குதாங்காக சமாளிக்க முடியாமலும், டப்பிங் படங்களின் பக்கம் திரும்பினார். இதனால் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டு, இன்று தெருவில் நிற்கிறார். குடும்பம் சந்திக்கக் கூடாத அளவில் வறுமையையும் கஷ்டங்களையும் சந்தித்துக் கொண்டுள்ளது. இப்படி மீட்கவே முடியாத சோகத்தில் அவரை தள்ளிய டப்பிங் படங்களை பற்றி என்னத்தை சொல்வது. அவரே தவறு செய்தவர் எனினும், இப்படி மீட்க முடியாத நிலைக்கு தள்ளிவிட்டதே இந்த விஷயம்:(:(:(

முரளிகண்ணன் said...

ராப், வருத்தமான செய்தி.

:-((

டப்பிங் படத்தால் சம்பாத்தித்தவர்கள் இருக்கிறார்கள். அப்போதைய ரசனையை அளவுகோலாக கொண்டு படத்தை டப் செய்தவர்கள் தப்பிக்கிறார்கள்.

Viji said...

முரளி சார் தெலுங்கு படம் பாக்க திருப்பதி வரைக்கும் போகனுமா நம்ம DC++ ல கொல்டினு சர்ச் பண்ணுங்க எல்லா படமும் கிடைக்கும் :)

முரளிகண்ணன் said...

வாங்க விஜி, உங்க பிளாக் ஏன் ஓப்பன் ஆக மாட்டேன்கிறது?. புதுப்பதிவை படிக்க வந்தேன். முடியவில்லை

முரளிகண்ணன் said...

DC++ ல தெலுங்கு மட்டும் வந்தா பரவாயில்லையே? :-)))))))))))))

Viji said...

//DC++ ல தெலுங்கு மட்டும் வந்தா பரவாயில்லையே? :-)))))))))))))//

:)))))))))))))))))))))))


//வாங்க விஜி, உங்க பிளாக் ஏன் ஓப்பன் ஆக மாட்டேன்கிறது?. புதுப்பதிவை படிக்க வந்தேன். முடியவில்லை
//

தெரியலங்க முரளி என்ன பிராப்ளம்னு? இந்த லிங்க் கிளிக்கி பாருங்க

http://electricalintamil.blogspot.com/