தற்போதைய தலைமுறைக்கு வெறும் குணசித்திர/காமெடி நடிகராக அறியப்படும் ஆர்.சுந்தர்ராஜன், பா வரிசை இயக்குனர்கள் என அறியப்பட்ட பாலசந்தர்,பாரதிராஜா,பாலுமகேந்திரா,பாக்யராஜ் ஆகியோர் தங்கள் உச்சத்தில் இருக்கும் போதே தன் முத்திரையை பதித்தவர். குறுகிய இடைவெளியில் ஏழு வெள்ளிவிழா படங்களை தந்து அனைவரையும் அசத்தியவர்.
இயல்பான திரைக்கதை,மென்மையான பாடல்கள்,அருமையான நகைச்சுவை இந்த மூன்றும் இவர் படங்களின் வெற்றிக்கு காரணம். அதில் சில முக்கிய படங்களை பார்க்கலாம்
பயனங்கள் முடிவதில்லை
கமல் நடித்த வாழ்வே மாயமும் இதே கதைதான். சாகப்போகும் வியாதி உள்ள காதலன், காதலியின் நல்வாழ்வுக்காக அவளை வெறுப்பது போல் நடிப்பது. இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் திரைக்கு வந்தன. இரண்டும் வெற்றி என்றாலும் பயனங்கள் முடிவதில்லை சூப்பர் டூப்பர் ஹிட். அந்த காலத்தில் புதியதாக டேப் ரிக்காடர்கள் வாங்கியவர்கள் முதலில் வாங்கும் பாடல் கேசட் இந்தப்பட கேசட்தான். கவுண்டமனியின் 'இந்த சென்னை மாநகரத்திலே' காமெடி சிறப்பாக பேசப்பட்ட ஒன்று.
வைதேகி காத்திருந்தாள்
விஜயகாந்துக்கு தாய்க்குலத்தின் ஆதரவு இந்த படத்தில் இருந்து தான் தொடங்கியது எனலாம். மூன்று கதைகளை இணைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். ஒருவருக்கு இல்லதாதால் சோகம். ஒருவருக்கு அதிகம் இருந்ததால் சோகம் (தண்ணீர்). ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு பாடலை மெல்லிசைக்குழுக்களும்,அழகு மலராட பாடலை கல்லூரியின் ஆண்டு விழாக்களில் ஆடும் பெண்களும் தத்து எடுத்துக்கொண்டனர். கவுண்டர் ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக வந்து ஆல் தியேட்டரையும் அதிரவைத்த படம்
நான் பாடும் பாடல்
விதவை சென்டிமென்ட் படம். கெடா எப்ப வெட்டுவாங்க? ரெண்டு ரூவாய்க்கு இவ்வளோ கொடுக்கும் போதேய் நெனைச்சேன், பீஸ் போயிருச்சா? போன்ற கவுண்டரின் பன்ச் டயலாக்குகள், பாடவா உன் பாடலை,மச்சானை வச்சுக்கடி போன்ற பாடல்கள் எல்லம் சேர்ந்து நல்ல பொழுதுபோக்கு படம்.
குங்குமசிமிழ்
மோகன்,ரேவதி,இளவரசி மற்றும் சந்திரசேகர் நடித்தது. நிலவு தூங்கும் நேரம் என்ற சூப்பர் ஹிட் பாடல் இடம்பெற்ற படம்.
அம்மன் கோவில் கிழக்காலே
விஜயகாந்துக்கு மற்றுமொரு பிரேக் தந்த படம்.
ராஜாதி ராஜா
இளையராஜா தயாரித்த படம். பிறகென்ன சொல்ல வேண்டும் பாடல்களைப் பற்றி.
மெல்லத் திறந்தது கதவு
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வனாதன், இளையராஜா இருவரும் இணைந்து இசையமைத்த படம். மோகன்,அமலா,ராதா நடித்தது. குழலூதும் கண்னனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா?, வா வென்னிலா உன்னைத்தானே மேகம் தேடுதே போன்ற மறக்க முடியாத பாடல்கள் நிறைந்த படம். இந்த படத்தில் இருந்தது போல் எந்தப் படத்திலும் அமலா அவ்வளவு அழகாக இருந்ததில்லை என்பது அமலா ரசிகளின் கருத்து. ஏவிஎம் தயாரித்த படமிது.
இவை தவிர நினைவே ஒரு சங்கீதம்,என் ஆசை மச்சான்,திருமதி பழனிச்சாமி, சாமி போட்ட முடிச்சு போன்ற படங்களையும் இயக்கினார்.
90 களில் பெரும்பாலான கதானாயகர்கள் ஆக்சன் கதைகளில் நடிப்பதையே விரும்பியது,இவரது படங்களுக்கு ஆதாரமான லேடிஸ் ஆடியன்ஸ் தொலைக்காட்சிகள் பக்கம் தங்கள் பார்வையை திருப்பியது, ரஹ்மானின் வருகையால் மெலடி பாடலை ரசிப்பவர்கள் குறைந்தது மற்றும் பொதுவாகவே குடும்பப்பாங்கான படங்களை ரசிப்பவர்கள் குறைந்தது இவற்றால் இவரது சில கடைசி படங்கள் தோல்வி அடைந்தன.
ஒயிலாட்டம் என்ற படத்தை இயக்கி,நடித்து தயாரித்தார். படம் வெற்றி பெறவில்லை. ஆனால் நடிப்பு என்னும் பாதை திறந்தது. அறியப்பட்ட நடிகராய் மாறிவிட்டார்.
அருமையான பாடல்களை ராஜா தந்திருந்தாலும், கவுண்டரின் நகைச்சுவை இருந்தாலும் இவரின் கதையும்,இயக்கமுமே அந்த படங்களை வெற்றி பெற வைத்தது. ஏனென்றால் அதைவிட நல்ல பாடல்களும்,நகைச்சுவையும் இருந்த படங்கள் பல தோல்வி கண்டுள்ளனவே?,
33 comments:
நல்ல பதிவு முரளிகண்ணன்!
கவுண்டமணி செந்தில் காமெடி கலக்கல் உச்சத்தில் நிறுத்தியது இவர்தானே..
(இதாண்ட மேன்டில்..மறக்க முடியுமா??)
நர்சிம்
(என் போன்ற இளைய தலைமுறைக்கு இன்னும் இதுபோன்ற தகவல்களை தரவேண்டும் )
நர்சிம் நானும் இளைய தலைமுறை தான் (34 தான் ஆச்சு). பிரிச்சுறாதீங்க
ஒரு பெண்ணின் தாபத்தை வைதேகி காத்திருந்தாளில் வரும் அழகு மலராட பாடலில் மிக அழகாக காட்டி இருப்பார்... எந்த வக்கிரமும் இல்லாமல் பெண்ணின் உணர்வை வேறு எந்த இயக்குரும் இவ்வளவு அழகாக காட்டியதாக நினைவு இல்லை..:)
ஒரு படத்தில் வடிவேலுவிடம் செருப்பை வைத்து காமெடி செய்வார்... அது வரும்போதெல்லாம் அவரது இயக்குநர் திறமை தான் நினைவுக்கு வரும்... அவருக்கு வந்த என்ன கொடும இது என்று
முரளிக் கண்ணன் அவர்களே,,
நல்ல தொகுப்புக்கள், தொகுப்புரையும் சிறப்பாக இருந்தது. சென்ற தலைமுறையின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான R.சுந்தரராஜன் அவர்களை என் போன்ற இளையவர்களுக்கு அறிமுகப் படுத்தியதற்கு நன்றி..
நல்ல பதிவு
இவர் நடிகர் ஆன காரணம் தெரியுமா?
ஒரு சமயம் தேவி காம்ப்ளக்ஸில் இவர் இயக்கிய படம் ஓடிக்கோண்டிருந்ததாம்.இவர் படம் பார்க்க போனபோது தியெட்டர் ஃபுல்.இவர் தான் இயக்குநர் என்றும்..டிக்கட் வேண்டும் என்ற போது யாரும் நம்பவில்லையாம்...அப்போதுதான் ஒரு சாதாரண
நடிகருக்கு இருக்கும் அளவு ரிகக்னிஷன்கூட டைரக்டர்களுக்கு இல்லை என்று எண்ணினாராம்.உடன் தான் இனி நடிக்க வேண்டும் என்று தீர்மானித்தாராம்.
சிலவருடங்களுக்கு முன் இவர் குடும்பத்தில் நடந்த ஒரு சோக நிகழ்ச்சி.இவரது மகன்..இள வயது..ஸ்கூட்டரில் செல்லும்போது ..வள்ளுவர்கோட்டம் அருகே பஸ் மோதி துர்மரணம் அடைந்தது.
இவரின் மெகா ஹிட் படங்களோடு எனக்கு மிகவும் பிடித்த படம் சாமி போட்ட முடிச்சு. பாடல்களும் கலக்கலாக இருக்கும்.
தமிழ் பிரியன் வருகைக்கு நன்றி. அருமையான காட்சியமைப்பு அந்த பாடல்
பின்னூட்டம் பெரியசாமி, முதல் வருகைக்கு நன்றி
ராதாகிருஷ்ணன் சார், வருகைக்கும் சுவராசிய தகவலை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றிகள்
கானா பிரபா
அந்த படத்தில் வரும் நீலவேணி பாடல் என் பேவரைட்
சுந்தர்ராஜன் சிறந்த குடும்ப இயக்குனர் என்பதில் சந்தேகம் இல்லை.. அதிரடி படங்களாக இல்லாமல் எளிமையான படங்களை கொடுத்து வெற்றி பெற்றவர்.
அதிலும் அவருடைய படங்களில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது.
//முரளிகண்ணன் said...
நர்சிம் நானும் இளைய தலைமுறை தான் (34 தான் ஆச்சு). பிரிச்சுறாதீங்க//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய் :-))))
முரளி கண்ணன் அதற்க்கு தான் இந்த மாதிரி பதிவு போட கூடாது போல... நல்லவேளை பாலசந்தர் பற்றி போடாம இருந்தீங்க...ஹா ஹா ஹா
முரளி,
சாமி போட்ட முடிச்சு படத்தில், சுந்தர்ராஜன் சிலம்பம் சண்டை செய்வார். இரண்டு கம்புகளை சுத்துவார்.
கிரி, ஏற்கனவே பாலசந்தர் பதிவு போட நினைச்சேன். இப்ப பயமாயிருக்கு
வாங்க குட்டிபிசாசு,
நல்ல திறமை வாய்ந்தவர் தான்.
அந்த படம் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என நினைத்தேன்.
அந்த ராத்திரிக்குச் சாட்சியில்லை.
Joy Kind
முரளிகண்ணன் அவர்களே ஆர்.சுந்தர்ராஜன் ரஜனிகாந்தை வைத்து இயக்கிய ராஜாதிராஜா படமும் இசைஞானியின் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களால் கல்லா கட்டியது. ராஜ் டிவியில் அந்த படம் 1000 முறைக்கு மேல் ஒளிபரப்பப்பட்டது. இவரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்தான் படையப்பா பாம்புப் புத்துப்புகழ் அனுமோகன்.
சின்னதம்பி பெரியதம்பி இவர் படம் தானே
தசாவதாரம் பார்த்த போது கூட எனக்கு மேண்டில் ஞாபகம் வந்தது !!
உங்களுக்கு எப்படியோ தெரியாது. புஷ் பேசும் ஒவ்வொரு வசனமும் எனக்கு செந்தில் கவுண்டமனியிடம் பேசிய வசனங்களை ஞாபகப்படுத்தியது
Na Cl என்றால் என்ன - அண்ணே, மேண்டில்னா என்னன்ணே :) :)
அனுஆயுதத்தை உபயோகிக்கலாமா - பூச்சி மருந்து அடித்தால் மிட்டாயில் உள்ள பூச்சிலாம் செத்துரும்ல
திரைப்படங்கள் குறித்த உங்களின் அடுத்த ஆராய்ச்சி
முருங்கைக்காய்
ஐஸ் புருட்
பா லு
குறித்து இருக்கும் என்று நினைக்கிறேன்
வருகைக்கு நன்றி புருனோ. தங்கள் சித்தம் என் பாக்கியம்
///Director R Sundarrajan - Hit Movies: Murali Kannan ////
ஸ்னாப்ஜட்ஜ்ல போட்டுட்டார் பாபா. அப்படீன்னா நீங்களும் ஒரு உருப்புடியான பதிவ எழுதிட்டீங்களா தலைவரே ??
வைதேகி காத்திருந்தாள் மாதிரி படங்கள் நான் பச்சப்புள்ளயா இருக்கும்போது வந்ததாம்...
கே டிவியில் ஒரு முறை பார்த்து ரசித்தபோது, ஆர்.சுந்தர்ராஜன் அவர்களின் அருமையான இயக்கத்தை பார்த்து மகிழ்ந்தேன்...
இதுபோன்ற பழங்கால இயக்குனர்களை இளைய தலைமுறைக்கு தொடர்ந்து அறிமுகப்படுத்தவும். ( சிம்பு ஹேர்ஸ்டைல் செய்ய சலூனுக்கு போவனும் டைம் ஆச்சு ஓய்)
வந்தியதேவன், மருத நாயகம் தங்கள் வருகைக்கு நன்றி.
செந்தழலாரே தங்கள் வருகைக்கு நன்றி. எனக்கே தெரியாமல் நல்ல பதிவு எழுதி விடுகிறேன் போலிருக்கு
நானே ராஜா நானே மந்திரி இவர் டைரக்ஷனா? அது கலக்கல் காமெடி படம். கேப்டன் அட்டகாசமா காமெடி பண்ணியிருப்பாரு...
இவர்தான் கவுண்டமணி செந்தில் ஜோடியை வைதேதி காத்திருந்தாள் படத்தில் இணைத்து பிரபலமாக்கியாதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். அது சரியான தகவலா?
அதே மாதிரி ராஜாதி ராஜாவில் இவரை நடிக்கச் சொல்லி(இவருடைய அபார டயலாக் டெலிவரி, டைமிங் சென்ஸ் இவற்றால் கவரப்பட்டு) ரஜினியும், ராஜா அவர்களும் மிகவும் வற்புறுத்தினார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கேன்.
நீங்க ஒருமுறை ராமராஜன் அவர்களைப் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தீங்களே, ஞாபகம் இருக்குங்களா, இவரோட படங்களையும் அதில் சேர்த்துக்கலாம். மிக மிக இயல்பான சிறு நகரத்து நாயகன், நாயகி. அவர்களின் பின்னணியும் நாம் தினமும் சந்திக்கும் கதாபாத்திரங்களை பெரிதும் ஒட்டி இருக்கும். விக்ரமன் அவர்களின் முன்னோடின்னுக் கூடச் சொல்லலாம்.
ராப், வைதேகி காத்திருந்தாள் அந்த ஜோடிக்கு பெரும் திருப்புமுனை. அதற்கு முன் இணையாக நடித்திருந்தாலும் இது டிரெண்ட் செட்டராக அமைந்த்து.
தற்போது கே.எஸ்.ரவிகுமாரின் கதை இலாகாவில் இருந்து, அவரது படங்களின் திரைக்கதைக்கு உதவி வருகிறார் என்று அறிகிறேன்.
சினிமாவில் இருந்து கொண்டே, சினிமாவை இவர் அதிகம் விமர்சிப்பாராம். அதனால் தான், குசேலன் படத்தில் அந்த கதாபத்திரத்தில் இவரை நடிக்க வைத்ததாக பி.வாசு கூறினார்.
//இந்த படத்தில் இருந்தது போல் எந்தப் படத்திலும் அமலா அவ்வளவு அழகாக இருந்ததில்லை என்பது அமலா ரசிகளின் கருத்து.//
டபுள் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்!!!!
//தற்போது கே.எஸ்.ரவிகுமாரின் கதை இலாகாவில் இருந்து, அவரது படங்களின் திரைக்கதைக்கு உதவி வருகிறார் என்று அறிகிறேன்.//
If true, what a fall!
அவருடைய நடிப்பில் நான் ரசித்தது திருமதி பழனிச்சாமியும், அமைதிப்படையும்.
//இந்த படத்தில் இருந்தது போல் எந்தப் படத்திலும் அமலா அவ்வளவு அழகாக இருந்ததில்லை என்பது அமலா ரசிகளின் கருத்து.//
டபுள் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்!!!!
//தற்போது கே.எஸ்.ரவிகுமாரின் கதை இலாகாவில் இருந்து, அவரது படங்களின் திரைக்கதைக்கு உதவி வருகிறார் என்று அறிகிறேன்.//
If true, what a fall!
அவருடைய நடிப்பில் நான் ரசித்தது திருமதி பழனிச்சாமியும், அமைதிப்படையும்.
இந்தியன், மிகவும் ரசித்தீர்களோ இரண்டு முறை பின்னூட்டம் இட்டிரிக்கீறிர்களே
R. சுந்தராஜன் விஜயை வைத்து காலமெல்லாம் காத்திருப்பேன் னு ஒரு மொக்கை படம் கொடுத்தார். அதுதான் அவரின் கடைசிப் படம்.
Post a Comment